Home One Line P2 தற்காப்பு, விண்வெளி துறையில் அமெரிக்க நிறுவனங்கள் முதலீடு செய்ய மோடி அழைப்பு

தற்காப்பு, விண்வெளி துறையில் அமெரிக்க நிறுவனங்கள் முதலீடு செய்ய மோடி அழைப்பு

583
0
SHARE
Ad

புது டில்லி: பிரதமர் நரேந்திர மோடி இந்திய அமெரிக்க வணிக மன்ற உச்சமாநாட்டில் அமெரிக்க நிறுவனங்களை இந்தியாவில் முதலீடு செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

இந்தியாவில் கொவிட்-19 தொற்று எண்ணிக்கை 1.2 மில்லியனைத் தொட்டுள்ள நிலையில் இந்த அழைப்பை அவர் விடுத்துள்ளார்.

இந்தியா ஐடியாஸ் என்கிற தளத்தில் உரையாற்றிய மோடி, தற்காப்பு மற்றும் விண்வெளி ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தனியார் முதலீடுகளை மேற்கொள்ள அரசாங்கம் முதலீட்டாளர்களுக்கு வசதிகள் ஏற்படுத்தி தரும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

இந்தியா மீது உலகளாவிய நம்பிக்கை உள்ளது என்றும், இந்தியா திறந்தவெளி, வாய்ப்புகள் மற்றும் விருப்பங்களின் சரியான கலவையை வழங்குகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“ஒவ்வொரு ஆண்டும், நாங்கள் அந்நிய நேரடி முதலீட்டில் சாதனை அளவை எட்டியுள்ளோம். ஒவ்வொரு ஆண்டும் முந்தைய ஆண்டை விட கணிசமாக அதிகமாக உள்ளது. ” என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

கொவிட்-19 தொடர்பான தடுப்பூசி ஆய்வுகளும் இந்தியாவில் ஓரவிற்கு வெற்றியைத் தரும் தகவல்கள் ஏற்பட்டுள்ளதால், ஆகஸ்டு- செப்டம்பர் மாதங்களில் இந்தியாவில் கொவிட்-19 தொற்று எண்ணிக்கை கணிசமாகக் குறையலாம் என்று கணிக்கப்படுகிறது.