Home One Line P1 மஇகா கிளைக் கூட்டங்கள் நாடு தழுவிய நிலையில் நடைபெறுகின்றன

மஇகா கிளைக் கூட்டங்கள் நாடு தழுவிய நிலையில் நடைபெறுகின்றன

803
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மஇகாவின் அமைப்புச் சட்டவிதிகளுக்கு ஏற்ப இவ்வாண்டுக்கான மஇகாவின் கிளைக் கூட்டங்கள் ஜுலை மாதம் முதல் தேதி முதல் 30ஆம் தேதிக்குள் நடைபெற வேண்டும்.

அந்த வகையில் மஇகாவின் கிளைக் கூட்டங்கள் பரபரப்பாக நடைபெற்று வருவதுடன், அரசு ஆணைக்கு ஏற்ப பொது நடமாட்ட கட்டுப்பாடுகளைப் பின்பற்றி கிளைக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன என்று மஇகாவின் தலைமைச் செயலாளர் டத்தோ எம். அசோஜன் பத்திரிகைக்கு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த காலங்களைப் போல் அல்லாமல், இப்பொழுது கிளைக் கூட்டங்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் கலந்து கொள்ள வேண்டுமென்ற கட்டாயம் இருப்பதினால், உறுப்பினர்களும் கிளைக் கூட்டங்களுக்கு வருகைத் தந்து மஇகாவிற்கு ஆதரவு அளித்து வருகின்றனர். கிளைத் தலைவர்களும் தத்தம் கிளை உறுப்பினர்களுடன் நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு கிளைகள் அமைந்திருக்கும் பகுதிகளில் உள்ள உறுப்பினர்களின் பிரச்சினைகளை களைவதற்குரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

#TamilSchoolmychoice

மேலும், பொதுத் தேர்தல் காலங்களில் மஇகா வலுவான கட்சியாக தேசிய முன்னணிக்கு முழு ஆதரவினை வழங்குவதற்கு இந்த நடைமுறை மிகவும் ஊன்றுகோலாகத் திகழும்.

மலேசிய இந்தியர்களின் முழுமையான ஆதரவினைப் பெற மஇகா பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் கோவிட் – 19   நாட்டை உலுக்கிக் கொண்டிருக்கும் இக்காலக்கட்டத்தில் கூட, மஇகா மக்களுக்கு முன்னுரிமைக் கொடுத்து பல்வேறு நடவடிக்கையில் களம் இறங்கியது அனைவரின் கவனத்தையும் ஈரத்துள்ளது. குறிப்பாக, “உதவி” திட்டத்தின் வழி இந்நோக்கம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. தற்போது இத்திட்டத்தின் வழி 13,000 பேருக்கு மேற்பட்டோர் நன்மை அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மஇகா வழங்கிய உதவித் திட்டமானது, அடித்தட்டு மக்கள் வரை சென்றுச் சேர்வதற்கு மஇகா தொண்டர்கள் மிகவும் கடினமாக உழைத்தனர் என்பதினால், அடிப்படையில் இந்தியச் சமுதாயத்தின் பார்வை மஇகாவின் பக்கம் மீண்டும் திரும்பியுள்ளது.

மஇகா தலைவர்கள் என்றும் இந்திய மக்களின் பிரச்சினைகளைக் களையத் தீவிரமாக செயல்பட வேண்டும் என்றும், இவ்வேளையில் மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன் அவர்கள் விடுத்துள்ள கோரிக்கை முன் நிறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும் என்றும் டத்தோ எம். அசோஜன் தனது பத்திரிகைச் செய்தியில் கூறியுள்ளார்.