Home One Line P1 சிலிம் சட்டமன்றம்: நம்பிக்கைக் கூட்டணி, டாக்டர் மகாதீர் முகாமுடன் பேசும்

சிலிம் சட்டமன்றம்: நம்பிக்கைக் கூட்டணி, டாக்டர் மகாதீர் முகாமுடன் பேசும்

502
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சிலிம் சட்டமன்றத்தில் டாக்டர் மகாதீர் முகமட் முகாம் போட்டியிடுவதற்காக விட்டுக் கொடுப்பது குறித்து நம்பிக்கைக் கூட்டணி இன்னும் முடிவு செய்யவில்லை என்று பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறினார்.

முன்னதாக, நேற்று செனட்டர் மார்சுகி யாஹ்யா, தேசிய கூட்டணி வேட்பாளரை எதிர்த்து டாக்டர் மகாதீர் முகாம் சிலிம் சட்டமன்றத்தில் போட்டியிடும் என்று கூறியிருந்தார்.

“இது குழப்பமாக உள்ளது. அவர் அப்படி சொன்னது நாங்கள் அதற்கு ஒப்புக் கொண்டது போல உள்ளது

#TamilSchoolmychoice

“இல்லை. நாங்கள் அவர்களுடன் கலந்து பேசுவோம். அவர்களின் நிலைபாடு என்னவென்று கேட்போம். செவ்வாய்க்கிழமை, நம்பிக்கைக் கூட்டணி முடிவு செய்யும்” என்று அன்வார் இப்ராகிம் கூறினார்.

இதற்கு முன்னர், பிகேஆர் சினி இடைத்தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று முடிவெடுத்திருந்தது. ஆனால், இப்போது நிலைமை வேறு என்று அவர் கூறினார்.

ஜூலை 15-ஆம் தேதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குசாய்ரி அப்துல் தாலிப் காலமானதைத் தொடர்ந்து சிலிம் சட்டமன்றம் காலியானது.

2004 முதல் நான்கு தவணைகள் அந்த தொகுதியில் அவர் சட்டமன்ற உறுப்பினரான இருந்துள்ளார்.

இதற்கிடையில், நேற்று வெள்ளிக்கிழமை சிலிம் சட்டமன்ற இடைத்தேர்தலில் டாக்டர் மகாதீர் முகமட் முகாம்  போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து பேசிய மார்சுகி யஹ்யா, அவர்களின் முகாம் தேசிய கூட்டணிக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்தும் என்று கூறியிருந்தார்.

சிலிம் இடைத்தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணி போட்டியிடாது என்று, நம்பிக்கைக் கூட்டணி தலைவர்கள் மன்ற உறுப்பினர் ஒருவர் சொன்னதாக அவர் கூறினார்.

“நாங்கள் (மகாதீர் முகாம்) சிலிம் இடைத்தேர்தலில் போட்டியிடுவோம்.

“நம்பிக்கைக் கூட்டணி தலைவர்கள் மன்ற உறுப்பினர் ஒருவர் அக்கூட்டணி போட்டியிடாது என்று கூறியது” என்று அவர் மலேசியாகினியிடம் கூறியிருந்தார்.