கோலாலம்பூர்: மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் போது தளர்த்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறையை மீண்டும் கடுமையாக்க அரசாங்கம் இன்று ஒப்புக் கொண்டுள்ளது.
கடந்த வாரத்தில் கொவிட் 19 சம்பவங்கள் அதிகரித்துள்ளன என்ற கவலையைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.
“அடிப்படையில்,நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நடைமுறைப்படுத்துவது தொடர்பான இன்றைய சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
“தொழில்நுட்பக் குழு நாளை கூடி நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறையின் மிகச்சிறந்த விவரங்களை அறிந்துகொண்டு திங்களன்று அமைச்சரவைக் கூட்டத்தில் அதை அட்டவணைப்படுத்தும்” என்று அவர் இன்று புத்ரா உலக வணிக மையத்தில் கூறினார்.