Home One Line P1 கொவிட்19: 2-வது பரிசோதனை செய்யாதவர்கள் கைது செய்யப்படுவர்

கொவிட்19: 2-வது பரிசோதனை செய்யாதவர்கள் கைது செய்யப்படுவர்

457
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கொவிட்19 தொடர்பாக இரண்டாவது பரிசோதனையை மேற்கொள்ளாத 2,900 மலேசியர்களும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவர்.

வெளிநாடுகளிலிருந்து நாட்டிற்குத் திரும்பிய இவர்கள் முதல் பரிசோதனைக்குப் பிறகு 13 நாட்கள் கழித்து மீண்டும் இரண்டாவது பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர். அவ்வாறு செய்யத் தவறிய 2,900 பேரும் கைது செய்யப்படுவர் என்று காவல் துறைத் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹாமிட் பாடோர் தெரிவித்தார்.

அவர்கள் மீது, இன்று முதல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார். அவர்களின் மொத்த பெயர் பட்டியலும் சுகாதார அமைச்சிடம் இருந்து பெறப்பட்டுவிட்டதாக அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

“அவர்கள் பரிசோதனையை மேற்கொள்ளாவிட்டால் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் அபராதத்தை எதிர்கொள்வர் அல்லது இரண்டையும் எதிர்கொள்வர்.

“ஒரு வேளை கைது செய்யும் போது, கொவிட்19 தொற்றுக்கு நேர்மறையான அறுகுறிகளைக் கொண்டிருந்தால், சிகிச்சைக்குப் பிறகு அவர்கள் மீது வழக்கு தொடுப்போம். இந்த விவகாரத்தில் நான் தீவிரமாக உள்ளேன்” என்று அவர் கூறினார்.

இதனிடையே, நாட்டில் தற்போது தனிமைப்படுத்தலில் உள்ள 9,600 பேர் பேருக்கு காவல் துறைத் தலைவர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர்களுக்காக நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

“நாங்கள் திடீர் சோதனைகளை வீட்டிற்கு வந்து மேற்கொள்வோம்.” என்று அவர் கூறினார்.