Home One Line P1 புதிய கட்சியா? மற்ற கட்சியில் இணைவதா? முடிவு ஆகஸ்டு 7!

புதிய கட்சியா? மற்ற கட்சியில் இணைவதா? முடிவு ஆகஸ்டு 7!

478
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பெர்சாத்து தங்கள் உறுப்பினர்களை நீக்கம் செய்தது தொடர்பான விவகாரத்தில் ஆகஸ்ட் 7-ஆம் தேதி உயர்நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பைப் பொறுத்து  புதிய கட்சி அமைக்கப்படுமா என்பதை துன் மகாதீர் தரப்பு முடிவு செய்யும்.

தனது அணிக்கு ஆதரவாக இல்லாவிட்டால் புதிய கட்சியை உருவாக்கும் வாய்ப்பை டாக்டர் மகாதிர் முகமட் நிராகரிக்கவில்லை.

அவரும் அவரது குழுவும் தற்போதுள்ள கட்சியில் சேருவது போன்ற பிற மதிப்பீடுகளையும் செய்வார்கள் என்று லங்காவி நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் கூறினார். ஆனால், அது அனைத்தும் நீதிமன்ற தீர்ப்பைப் பொறுத்தது என்று அவர் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

“நாங்கள் பொதுத் தேர்தலில் போட்டியிட விரும்பினால், ஒரு கட்சி இருக்க வேண்டும். எனவே நீதிமன்றத்தின் முடிவுக்காக நாங்கள் காத்திருக்கிறோம். கட்சி அமைப்பதா இல்லையா என்பது பேசப்படும். நாங்கள் மற்ற கட்சிகளில் இணையவும் பேசி வருகிறோம், ஆனால், முடிவு செய்யப்படவில்லை, ” என்று அவர் கூறினார்.