Home கலை உலகம் நடமாட்டக் கட்டுப்பாட்டு காலத்தில் ராகா அறிவிப்பாளர்களின் அனுபவங்கள்

நடமாட்டக் கட்டுப்பாட்டு காலத்தில் ராகா அறிவிப்பாளர்களின் அனுபவங்கள்

741
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் போது, மலேசியாவின் முதல் நிலை தமிழ் வானொலி நிலையமான ராகாவின் அறிவிப்பாளர்கள் முதன்முறையாக வீட்டிலிருந்தபடியே பணியாற்றினர். மலேசியர்களைத் தொடர்ந்து தகவலறியச் செய்ததோடு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளாலும் மகிழ்வித்தனர். அதே நேரத்தில், கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த அரசாங்கம் அமல்படுத்திய நடைமுறைகளைப் பின்பற்றி தங்களின் வானொலி இரசிகர்களுக்கு ஒரு முன்மாதிரியாக திகழ்ந்தனர்.

சமீபத்தில், ராகா அறிவிப்பாளர்களான அஹிலா, சுரேஷ், ரேவதி, உதயா மற்றும் கோகுலன் ஆகியோர் வீட்டிலிருந்து பணியாற்றிய தங்களின் இனிமையான அனுபவங்களைப் பகிர்ந்துக் கொண்டனர். அவர்கள் பகிர்ந்துக் கொண்ட விபரங்கள் பின்வருமாறு:

  • நீங்கள் எவ்வளவு காலமாக வானொலி அறிவிப்பாளராக பணிபுரிகிறீர்கள்?
    • அஹிலா: 10 ஆண்டுகள்.
    • சுரேஷ்: 10 ஆண்டுகள்.
    • ரேவதி: சுமார் 15 முதல் 17 ஆண்டுகள்.
    • உதயா: 18 ஆண்டுகள்.
    • கோகுலன்: 2 ஆண்டுகள்.

      சுரேஷ்-அஹிலா-ரேவதி-கோகுலன்-உதயா
  • முன்னோடியில்லாத இந்த காலகட்டத்தில் அநேகமாக நீங்கள் முதல் முறையாக, வீட்டிலிருந்து வானொலி அறிவிப்பாளர்களாகப் பணிப்புரிந்திருப்பீர்கள். எத்தனை நாட்கள் வீட்டிலிருந்து வேலைச் செய்ய வேண்டியிருந்தது?
  • அஹிலா: 3 மாதங்கள்.
  • சுரேஷ்: சுமார் 10 வாரங்கள்.
  • ரேவதி: கிட்டத்தட்ட இரண்டரை மாதங்கள்.
  • உதயா: ஏறக்குறைய 80 நாட்கள்.
  • கோகுலன்: சுமார் 3 மாதங்களுக்கும் மேலாகிவிட்டது. வீட்டிலிருந்து வேலை செய்யும் இறுதி வாரத்தில், எனது சொந்த ஊரிலிருந்து பணிப்புரியும் பொன்னான வாய்ப்புக் கிட்டியது.
  • வீட்டிலிருந்து பணி புரிந்த உங்களின் அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்துக் கொள்ள முடியுமா?
  • அஹிலா: 3 மாதங்களாக எங்களின் நிகழ்ச்சிகளைப் பதிவு செய்ய காயலை (ஸ்கைப்) நம்பினோம். இணை அறிவிப்பாளர், சுரேஷ் மற்றும் நானும் எங்களின் நேரத்தின் ஒருங்கிணைப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதால் இது கொஞ்சம் கடினமாக இருந்தது. ஏனெனில், அது நல்ல இணைய இணைப்பு மற்றும் பலவற்றைப் பொறுத்தது.தனிப்பட்ட முறையில், ஆரோக்கியமான உணவை உட்கொள்வது, உடற்பயிற்சி செய்வது, சருமத்தைக் கவனித்துக்கொள்வது போன்ற ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கடைப்பிடிப்பதில் கவனம் செலுத்தினேன். வீட்டிலிருந்து பணிபுரிந்துக் கொண்டே என்னை மகிழ்ச்சிப்படுத்த முடியும் என்பதை வீட்டிலிருந்து வேலை செய்யும் காலக்கட்டம் எனக்கு உணர்த்தியது. சரியான திட்டமிடல் இன்றியமையாப் பங்கை ஆற்றியது. சிறு துளி பெரு வெள்ளம் என்பதற்கு ஒப்ப சில சேமிப்புகளைச் செய்யக் கற்றுக்கொண்டேன்.
    #TamilSchoolmychoice

    சுரேஷ்
  • சுரேஷ்: நான் வேலை செய்துப் பழகிவிட்ட அமைதியான ஸ்டுடியோ சூழல் இல்லாமல் சற்று சுகமற்ற நிலையை உணர்ந்தேன். மேலும், வீட்டில் அதிகம் எதிர்பார்க்க முடியவில்லை.எனது இணைய இணைப்பு, வேகம் மற்றும் நிலைத்தன்மையுடன் சிக்கல்களை எதிர்நோக்கினேன்.ஒரு நல்ல இணைப்பை உறுதிப்படுத்த நான் மற்றவர்களின் சாதனங்களை பயன்படுத்த வேண்டியிருந்தது. இது அவர்களின் சிரமத்திற்கு வித்திட்டது. வீட்டிலிருந்து வேலை செய்வது நான் எதிர்பார்த்ததை விட கடினமாக இருந்தது. எனவே, இப்போது வீட்டில் ஒரு மினி ஸ்டுடியோ அமைப்பதைப் பற்றி யோசித்து வருகிறேன்.எனது முக்கிய சவால்களில் ஒன்று எடை அதிகரிப்பு.இருப்பினும், அதை நிர்வகிக்க நான் கற்றுக் கொண்டேன். கேரட், கத்திரிக்காய் போன்ற காய்கறிகளை பயிரிட்டதோடு தோட்டக்கலையிலும் ஈடுபட்டேன். அதுமட்டுமின்றி, நான் சமையலிலும் ஈடுபட்டேன். மேற்கத்திய உணவு வகைகள் உட்பட சில புதிய உணவுகளைக் கண்டுபிடித்தேன். அவை நன்றாகவே இருந்தது.
  • ரேவதி: இது எனக்கு ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது. பதிவுகளைச் செய்ய எனது படுக்கையறையை ரெக்கார்டிங் ஸ்டுடியோவாகப் பயன்படுத்தினேன். மேலும், உபகரணங்கள் பற்றாக்குறையால் எனது தொலைபேசியை பதிவு செய்யும் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தினேன்.இவ்வரம்புகளுக்கு மத்தியில், நேயர்களுக்கு நல்ல அறிவைப் பரவல் செய்ய முடிந்தது.
    ரேவதி

    அதுமட்டுமின்றி, ஸ்டுடியோவில் ஆக்கப்பூர்வமாகவும் ஆற்றல் மிக்கவராகவும் இருந்ததைப் போல என்னால் வீட்டிலேயும் பணிபுரிய முடிந்தது.

    எனது நிகழ்ச்சிகளுக்கானப் பதிவுகளைச் செய்வதில் சிரமங்களை எதிர்நோக்கினேன். எனது கடமைகளைச் செய்ய எனது படுக்கையறையைப் பயன்படுத்தியதால் முதல் வாரம் சற்று கடினமாக இருந்தது. எனது பேச்சுத் தொகுப்புகளுக்கு நான் பதிவுகளை மேற்கொள்ளும்போது என் மகனும் செல்லப் பிராணியும் என்னைத் தொந்தரவுச் செய்தனர். அதன்பிறகு, என் மகன் நிலைமைக்கு ஏற்றவாறு மாறியதோடு முழு ஒத்துழைப்பையும் வழங்கினார். இது என் பணிகளை மேலும் எளிதாக்கியது. சில நேரங்களில், இரவில் என் மகன் விழித்திருக்கும் தருவாயில் பதிவுகளை மேற்க்கொள்வேன்.எனது பணிகளைத் தொடர சிரமங்களை எதிர்நோக்கியதால் எனது பதிவுகளைத் தொடர்வதற்கு முன் அவர் தூங்குவதை உறுதி செய்ய வேண்டியிருந்தது.

    சில காலக்கட்டத்திற்குப் பிறகு என் பணியை நன்றாக நிர்வகிக்க முடிந்ததில் நான் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். எனது படுக்கையறை எனக்கு சிறந்த ஊன்றுகோலாக இருந்ததோடு என் கடமைகளைத் திறம்பட செய்யவும் வழிவகுத்தது.

  • உதயா: நான் வரையறுக்கப்பட்ட வளங்கள் மற்றும் தொழில்நுட்பத்துடன் பணிபுரிந்தேன். மேலும் உள்ளடக்கத்துடன் சவால்களையும் எதிர்நோக்கினேன். சுற்றுப்புறம் மற்றும் மன அமைப்பின் மாற்றம் ஒரு காரணியாக இருந்தது. ஸ்டுடியோ மற்றும் உபகரணங்கள் எப்போதுமே எனக்கு ஒரு கூடுதல் ஊக்கத்தை அளித்தன.
    உதயா

    இருப்பினும், எங்களால் நல்ல உள்ளடக்கத்தை உருவாக்க முடிந்தது. வரையறுக்கப்பட்ட வளங்கள் மிகப்பெரிய சவாலாக இருந்தது. விளக்கக் காட்சி திறன்கள் (presentation skills) குறிப்பாக தவறுகள் இல்லாமல் பேசுவது உட்பட புதிய திறன்களைக் கற்றுக்கொள்ள எனக்கு உதவியது.தொகுப்பாக்கம் (எடிட்டிங்), காணொளிப் படப்பிடிப்பு என பணிக்கு பொருத்தமான வேறு சில திறன்களையும் நான் கற்றுக் கொண்டேன். அழுத்தம் என்னை விலைமதிப்பற்றதாக ஆக்கியது. என்னை வலுவாகவும், ஒழுக்கமாகவும், ஆக்கபூர்வமாகவும் ஆக்கியது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை. மேலும், நான் புதிய விஷயங்களிலும் ஈடுபட்டேன். பெற்ற விஷயங்களை எப்போதும் உரிமைக் கொண்டாடக்கூடாது என்றும் கிடைக்கப் பெற்ற ஆசீர்வாதங்களைக் கணக்கிடவும் கற்றுக் கொடுத்தது.

  • கோகுலன்: வீட்டிலிருந்து வேலை செய்தல், ஸ்டுடியோ மற்றும் அதிலுள்ள உயர்தர உபகரணங்கள் பயன்படுத்தலை இழக்கச் செய்தது. சூழல் மற்றும் போதிய உபகரணங்கள் இல்லாமை எனது முக்கிய சவாலாகும்.இருப்பினும், மைக்ரோஃபோன் போன்றவற்றை நான் வாங்கியதால் அடிப்படை உபகரணங்களுடன் வீட்டில் ஓர் எளிய அமைப்பை ஏற்பாடு செய்ய முடிந்தது.என்னிடம் இருந்ததைப் பயன்படுத்தி சில ஆக்கபூர்வமான உள்ளடக்கத்தையும் உருவாக்கினேன். ஆம். நிகழ்ச்சியை நடத்தும்போது மிகவும் சரளமாகப் பேசவும் கற்றுக்கொண்டேன். வீட்டில் உயர்தர மென்பொருள் இல்லாமையால், நிகழ்ச்சியின் போது குறிப்பாக ஆன்-ஏரின் போது எந்தத் தவறும் ஏற்படாமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டியிருந்தது.

    கோகுலன்
  • நீங்கள் மீண்டும் ஸ்டுடியோவுக்கு வந்துவிட்டதால், உங்களின் மன நிலை எப்படி இருந்தது?
    • அஹிலா: முன்பை விட ஸ்டுடியோ சூழலை நான் மிகவும் பாராட்டுகிறேன். இதற்கு முன், நான் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், வீட்டிலிருந்து வேலை செய்தல், ஸ்டுடியோவின் முக்கியத்துவத்தையும் மற்றும் வேலை வாழ்க்கை சமநிலையைப் பற்றியும் எனக்குக் கற்றுக் கொடுத்தது.
    • சுரேஷ்: நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்!
    • ரேவதி: அமைப்பை (system) எவ்வாறு பயன்படுத்துவது உட்பட கடவுச்சொற்களை நினைவில் கொள்வதிலும் நான் உண்மையில் சிரமப்பட்டேன்.
    • உதயா: அலுவலகம் மற்றும் ஸ்டுடியோவில் புதிய நிர்ணயிக்கப்பட்ட நடவடிக்கை செயல்முறைகள், விதிகள் மற்றும் விதிமுறைகளுடன் சூழலில் நிச்சயமாக மாற்றம் உள்ளது. வீட்டிலிருந்து வேலைச் செய்த சூழலை நான் இழக்கவும் (miss) தொடங்கினேன்.
    • கோகுலன்: ஒலிச் சரிப்பார்ப்பு, மிக்சர்கள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய தேவையான அனைத்து கருவிகளையும் சரியாகக் கொண்டிருக்கும் ஸ்டுடியோவுக்குத் திரும்புவது மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கிறது. நான் ஸ்டுடியோவில் மேலும் பலவற்றைச் செய்ய முடிகிறது. அதுமட்டுமின்றி, ஆன்-ஏர் பகுதிகள் உயிரோட்டமாக இருப்பதையும் உறுதிசெய்ய முடிகிறது.
  • இந்நேரத்தில் ரசிகர்கள் / விருந்தினர்களுடன் நீங்கள் நடத்திய சுவாரசியமான பகுதிகள் மற்றும் உரையாடல்களை பகிர்ந்துக் கொள்க?அஹிலா: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கு முன்பு, நான் இன்ஸ்டாகிராம் நேரலையைப் பற்றி அதிகம் அறிந்திருக்கவில்லை, அதில் எனக்கு ஆர்வமும் இல்லை. நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் போது, ​​எனது ரசிகர்களுடன் தொடர்புகொள்வதற்கு நான் இன்ஸ்டாகிராம் நேரலையைப் பயன்படுத்தினேன்.
    அஹிலா

    ஆச்சரியப்படும் விதமாக, எனக்கு அது மிகவும் பிடித்திருந்தது. மறக்க முடியாத ஒரு பிரிவு நிச்சயமாக இருந்தது. நான் அறிவிப்பாளர் அணியில் ஒருவராக இருந்த, ராகாவின் முதல் மெய்நிகர் தமிழ் புத்தாண்டு இசை நிகழ்ச்சி 2020 ஆகும். அதன் பாராட்டக்குரிய வெற்றியைக் கண்டு நான் வியப்படைந்தேன்.

  • சுரேஷ்: கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள், நோயாளிகள், தனிமைப்படுத்தப்பட்ட செயல்முறைக்கு உட்பட்டவர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் ஆகியோரை நேர்காணல் செய்ய எங்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு கிடைத்தது. இவை அனைத்தும் காணொளி அழைப்புகள் அல்லது பிற முறைகள் மூலம் செய்யப்பட்டன.
  • ரேவதி: தொலைபேசி உரையாடல்கள் இல்லாததால் எனது ரசிகர்கள் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் வழியாக என்னுடன் தொடர்புக் கொண்டனர். தோட்டக்கலை மற்றும் தாவரங்களை எளிதில் வளர்க்கும் அணுகுமுறைகளை ஒட்டி அதிக சிறுகதைகளை உருவாக்க அவர்கள் என்னை ஊக்குவித்தனர்.
  • உதயா: எனது கதைகள் மிகவும் சுவாரசியமானவை. மேலும் பாராட்டுகளையும் பெற்றன. குறிப்பாக ‘வேடிக்கையான நபர்கள் மற்றும் வேடிக்கையான சம்பவங்கள்’ என்ற தலைப்பைக் கொண்ட எனது நிகழ்ச்சி ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்றது. நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் போது, கிட்டத்தட்ட 800 கதைகளைப் நான் பகிர்ந்துக் கொண்டேன். அது எனக்கு மறக்கமுடியாத அனுபவம்.
  • கோகுலன்: நான் வசிக்குமிடத்தின் குடியிருப்பாளர்களைச் சந்திக்க எனக்கு ஓர் அரிய வாய்ப்பு கிடைத்தது. நான் வீட்டிலிருந்து வேலை செய்கிறேன் என்பதை அறிந்த அவர்கள் மிகவும் ஆச்சரியப்பட்டனர்.வீட்டிலிருந்து வேலை செய்யும் போது ஆன்-ஏர் செய்வது எப்படி சாத்தியம் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.பாடல் சமர்ப்பணப் பிரிவு எனக்கும் என் இரசிகர்களுக்கும் மிகவும் பிடித்த அங்கம். நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்குப் பிறகும் நாங்கள் அவ்வங்கத்தை தொடர்ந்தோம். ஏனெனில், இரசிகர்கள் அவர்களுக்கு விருப்பமான பாடல்களை எனது தனிப்பட்ட இன்ஸ்டாகிராம் வழியாகக் கோர மிகவும் கைக்கொடுத்தது.
  • கோவிட்-19, நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை, நிபந்தனைகளுக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை குறித்து இரசிகர்களுக்கு விழிப்புணர்வை நீங்களும் ராகா குழுவினரும் எவ்வாறு உருவாக்கினீர்கள்?
  • அஹிலா: கோவிட்-19 உடன் தொடர்புடைய தற்போதைய செய்திகள் மற்றும் தலைப்புகள் எங்களின் நிகழ்ச்சிகளில் தினமும் அதிகம் சேர்க்கப்படுவதை உறுதி செய்தோம். அதைத் தவிர, எங்களின் இரசிகர்களை வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கும்படி ஊக்குவித்தோம். எங்களின் இரசிகர்களின் பாதுகாப்பு மற்றும் கோவிட்-19 சங்கிலியை உடைப்பதன் முக்கியத்துவத்தை அவர்களுக்கு நினைவூட்டுவதற்காக ஏராளமான பொதுச் சேவை அறிவிப்புகள் (பி.எஸ்.ஏ) ஒலிபரப்பப்பட்டன.
  • சுரேஷ்: பொதுச் சேவை அறிவிப்புகள், கோவிட்-19 ஒட்டிய தலைப்புகளில் தினசரி உரையாடல்கள், புதிய விபரங்களை சரியான நேரத்தில் தெரிவித்து நேயர்களைத் தகவலறியச் செய்தல், மிக முக்கியமாக சமூக ஊடகங்களில் கோவிட்-19 தொடர்புடைய விஷயங்களைப் பகிர்ந்து ரசிகர்களைத் தகவலறியச் செய்தல் என பல வழிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தினோம்.
  • ரேவதி: ஒலிபரப்பு, சமூக ஊடக தளங்கள், சிறுகதைகள் மற்றும் காணொளிகள் வழியாக இரசிகர்களை தகவலறியச் செய்தோம்.
  • உதயா: தினசரி விபரங்கள், பொதுச் சேவை அறிவிப்புகள் மற்றும் தனிப்பட்ட அனுபவங்களைப் பகிர்வதன் மூலம் ரசிகர்கள் தகவல்களை அறிந்தனர்.
  • கோகுலன்: பொதுச் சேவை அறிவிப்புகள், உலகெங்கிலும் நடக்கும் நிகழ்வுகளின் தற்போதைய கதைகளைப் பகிர்தல், இத்தொற்றுநோயின் தாக்கத்தைப் பற்றிய விபரங்களைப் பகிர்தல் என பல வழிகளில் விழிப்புணர்வு உருவாக்கப்பட்டது.
  • வானொலித் துறையில் வேலை தொடங்க விரும்புவோருக்கு உங்களின் ஆலோசனை/குறிப்புகள் என்ன?
  • அஹிலா: வானொலித்துறையில் என்ன நடக்கிறது என்பதை அறியவும் அதனைப் பற்றி தெரிந்துக் கொள்ளவும் அவர்கள் அதிகம் வானொலி கேட்க வேண்டும் என்பதே என் ஆலோசனை. ஆர்வமுள்ள பலர் அரிதாகவே வானொலியைக் கேட்கின்றனர். மேலும், அதனைப் பற்றி மிக அரிதாகத் தெரிந்திருக்கின்றனர். நேர்முகத் தேர்வில் பங்கேற்பதோடு, உங்கள் திறமையை வெளிக்கொணர உங்களின் சிறந்தப் படைப்பை வழங்கவும் தவறாதீர்கள்.
  • சுரேஷ்: வானொலி நேர்முகத் தேர்வுகளை அடையாளம் காண்பதோடு, முன்பே உங்களைப் பயிற்றுவியுங்கள். இணையத்தில் வெவ்வேறு தளங்களைப் பயன்படுத்தி உங்களின் திறன்களையும் நீங்கள் சோதிக்கலாம்.
  • ரேவதி: சமீபத்திய செய்திகளைப் படிப்பதோடு ஆராயுங்கள். அதனைப்பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள். மேலும், பணிவாக, கனிவாக, தனித்துவமாக, மற்றும் புத்திசாலித்தனமாக செயல்படுங்கள்.
  • உதயா: பெட்டிக்கு வெளியில் (out of the box) ஆக்கப்பூர்வமாக சிந்தியுங்கள், திறன்கள் மிக்கவராக இருங்கள், பல திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள் மற்றும் துறையைச் சார்ந்த தேவைகளுக்கு ஏற்ப உங்களைப் புதுப்பித்துக் கொள்ளுங்கள்.
  • கோகுலன்: இப்போது, வானொலியில் பணிப் புரிவது மிகவும் பிரசித்திப் பெற்றது. ஒரு வானொலி ஜாக்கியாக இருப்பதை விட அப்பாற்பட்டது. நீங்கள் ஒரு அன்பான ஆளுமை கொண்டிருக்க வேண்டும்.ஏனென்றால், மக்கள் உங்களுடன் பேசும் பொழுதோ அல்லது உங்கள் குரலுடன் பயணிக்கும் பொழுதோ உங்கள் குரலை இரசிப்பதோடு சுகமாகவும் கருத வேண்டும்.எனவே, உங்களின் தினசரி வாழ்க்கையில் ஒரு அன்பான நபராக இருப்பதே எனது ஆலோசனை. உங்களைச் சுற்றியுள்ளவர்களை நேசியுங்கள், அவர்களின் கதைகளைத் தீர்ப்பின்றி கேளுங்கள். உங்களிடம் பேச போதுமான கருத்துக்கள் இல்லாதபோது, ​​உரையாடலையும் தருணத்தையும் இன்னும் அர்த்தமுள்ளதாகவும் அழகானதாகவும் மாற்றுவதற்கு முன்பு நீங்கள் கேள்விப்பட்ட பொருத்தமான கதைகளைக் கொண்டு வர முயற்சிக்கலாம்.நீங்கள் கொண்டு வரும் கதைகளைக் கவனத்தில் கொள்ளுங்கள். உண்மையான கதை சொல்பவராக இருங்கள் மற்றும் கதைகளை உங்கள் சுய வழி மற்றும் பாணியில் விவரியுங்கள்.