Home One Line P1 சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவதா? விசாரணைத் தேவை

சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவதா? விசாரணைத் தேவை

443
0
SHARE
Ad

கோத்தா கினபாலு: மாநிலத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் ‘அமைதிக்கு இடையூறு விளைவிப்பதாக’ கூறப்படும் சில தரப்புகளின் நடவடிக்கைகள் குறித்து முழுமையான விசாரணைக்கு சபா முதல்வர் ஷாபி அப்டால் அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து காவல் துறையில் புகார் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார். மேலும், அரசாங்க பிரதிநிதிகளை வற்புறுத்துவதற்கும், அச்சுறுத்துவதற்கும் அனுப்பியவர்களை அடையாளம் காண விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தாம் நம்புவதாக ஓர் அறிக்கையின் வாயிலாகத் தெரிவித்தார்.

“சில தரப்புகளால் சந்திக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர் என்பதை நான் புரிந்துகொள்கிறேன். சிலர் வீட்டினுள் நுழைகிறார்கள்.

#TamilSchoolmychoice

“இது ஒரு முறை நடக்கவில்லை. இது மீண்டும் மீண்டும் நிகழ்ந்துள்ளது. இது தனிநபரின் அமைதியைக் குலைக்கிறது.

“அரசாங்கத்தின் மாண்புமிகுவை சந்தித்ததாகக் கூறப்படுகிறது. யார் அந்த மாண்புமிகு? அவர்கள் ஓர் அரசாங்கத்தை உருவாக்க விரும்புகிறார்களா அல்லது அவர்கள் முதல்வராக இருக்க விரும்புகிறார்களா. அவர்கள் ஆளும் அரசாங்கமாக இருக்க விரும்புகிறார்களா? அவர்களுக்கு பின்னால் மற்ற கட்சிகளும் உள்ளன என்று நான் நம்புகிறேன், ” என்று அவர் கூறினார்.

இந்த நிலைமை மாநிலம் மட்டுமல்லாமல் நாடு தழுவிய அளவில் அமைதியைப் பாதிக்கும் என்று ஷாபி கூறினார்.

எனவே, சட்டமன்ற உறுப்பினரை யார் அவ்வாறு வற்புறுத்துகிறார்கள் என்பது குறித்து மேலதிக விசாரணை நடத்துமாறு அதிகாரிகளை அவர் கேட்டுக்கொண்டார்.

“சட்டமன்ற உறுப்பினரை வாங்குவதற்கான முயற்சி உள்ளது என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால், அந்த நபர் விலைப்போக விரும்பவில்லை என்றால், போதும். அவர்கள் விற்பனைக்கு இல்லை” என்று அவர் கூறினார்.

செம்போர்னாவின் நாடாளுமன்ற உறுப்பினரான ஷாபி, இந்த பிரச்சனையை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வருவதாகக்  கூறினார்.

“நான் பின்னர் நாடாளுமன்றத்தில் பேசுவேன்,” என்று அவர் கூறினார்.

முன்னாள் சபா முதல்வர் மூசா அமான் மாநில அரசாங்கத்தை கைப்பற்ற சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை சேகரிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.