Home One Line P1 3 இலக்க எண்ணை அடைந்தால், நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்படும்

3 இலக்க எண்ணை அடைந்தால், நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்படும்

556
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நாட்டில் தினசரி நேர்மறை கொவிட் -19 சம்பவங்கள் மூன்று இலக்க எண்ணை அடையும் போது, நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மீண்டும் செயல்படுத்தப்படுவதற்கான சாத்தியத்தை தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் நிராகரிக்கவில்லை.

சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்தால், கட்டுப்பாட்டு ஆணையை மீண்டும் அமல்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை. இதனால், தொற்று நோயைக் கட்டுப்படுத்த ஆரம்பத்தில் செய்யப்பட்டதைப் போலவே இயக்கத்தையும் மட்டுப்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.

“தொடர்ச்சியாக நான்கு நாட்கள் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சுகாதார அமைச்சின் அறிக்கையின்படி, இந்த எண்ணிக்கை அதிகரிப்பு நம்முடைய சொந்த அலட்சியத்தால் என்று கூறுகிறது. நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறையை மீறும் போது, இறுதியாக சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.

#TamilSchoolmychoice

“சம்பவங்களின் எண்ணிக்கை மூன்று இலக்கங்களை உள்ளடக்கினால், நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை செயல்படுத்தப்படும். எங்களுக்கு வேறு வழியில்லை, எல்லா இயக்கங்களையும் மூடலாம்.

“இன்னும் தாமதமாகவில்லை என்று நம்புகிறோம்” என்று அவர் இன்று செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

நேற்று, நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மீதான நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறையை அரசாங்கம் கடுமையாக்க ஒப்புக் கொண்டதாக இஸ்மாயில் சப்ரி கூறியிருந்தார்.