Home One Line P1 கொவிட்19: 13 சம்பவங்கள் பதிவு, ஒருவர் மரணம்!

கொவிட்19: 13 சம்பவங்கள் பதிவு, ஒருவர் மரணம்!

537
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 13 புதிய கொவிட்19 பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து நாட்டின் மொத்த கொவிட்19 பாதிப்பு எண்ணிக்கை 8,897-ஆக உயர்ந்துள்ளது.

புதிதாக அடையாளம் காணப்பட்ட 13 சம்பவங்களில் மூவர் வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு திரும்பியவர்கள் ஆவர். உள்நாட்டில் 10 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இன்று 6 பேர் குணமடைந்து வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 8,600 -ஆக உயர்ந்துள்ளது.

நாட்டில் மொத்தம் 173 பேர் இன்னும் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் 2 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். ஒருவருக்கு சுவாசக் கருவி உதவி தேவைப்படுகிறது.

இன்று ஒருவர் மரணமுற்ற நிலையில், நாட்டில் மரணமுற்றோரின் எண்ணிக்கை 124-ஆக அதிகரித்துள்ளது.