Home One Line P2 மின்னல் பண்பலையின் மின்னும் நட்சத்திரம் 2020 பாடல் திறன் போட்டி

மின்னல் பண்பலையின் மின்னும் நட்சத்திரம் 2020 பாடல் திறன் போட்டி

573
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மின்னல் பண்பலையின் மின்னும் நட்சத்திரம் 2020 பாடல் திறன் போட்டிக்கு 500- க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் தமிழ் மற்றும் தேசிய மொழியில் பாடி தங்களுடைய காணொளிகளை #minnalstar2020 என பதிவு செய்து ‘Instagram’இல் பதிவேற்றியிருந்தனர்.

500- க்கு மேற்பட்ட போட்டியாளர்களுடன் தொடங்கிய முதல் கட்டம் த‌ற்போது இருபது போட்டியாளர்களுடன் அரை இறுதிச் சுற்றை அடைந்துள்ளது.

மின்னலின் மின்னும் நட்சத்திரம் 2020 பாடல் திறன் போட்டிக்கான முதல் கட்ட நடுவர்களான நாட்டின் பிரபல இசையமைப்பாளர் திரு. ஜெய் மற்றும் முன்னணி பாடகி திருமதி ஷர்மிளா சிவகுரு மின்னல் பண்பலையில் நேரலையாக தேர்வு பெற்ற இருபது பேரின் பெயர்களை அறிவித்தனர்.

#TamilSchoolmychoice

இருபது போட்டியாளர்களுடன் விறுவிறுப்பாக தொடங்கவுள்ள அரை இறுதிச் சுற்றில், யார் இறுதிச் சுற்றுக்கு தேர்வாகப் போகிறார்கள் என்ற பெரும் எதிர்பார்ப்பு இப்போது அதிகமாகியுள்ளது.

மின்னலின் மின்னும் நட்சத்திரம் போட்டிக்கு தேர்வுப் பெற்ற அந்த இருபது போட்டியாளர்கள்:

1. அருளினி ஆறுமுகம் (உலுதிராம், ஜொகூர்)
2. S.சிவஞான மூர்த்தி (கிள்ளான், சிலாங்கூர்)
3. நிவேந்திர ராவ் நாராயணமூர்த்தி (சுங்கை பூலோ, சிலாங்கூர்)
4. சுபாஸ்ரீ ராகவன் (கிள்ளான், சிலாங்கூர்)
5. காயத்ரி தாமோதரன் (செதாப்பாக், தலைநகர்)
6. மிஷல் கிரேஸ் பிரான்சிஸ் (சிரம்பான், நெகிரி செம்பிலான்)
7. ஜெய பார்கவி சந்திர ராவ் (ரவாங், சிலாங்கூர்)
8. கீர்த்தனா லெட்சுமண நாயுடு (ஜாலான் ஈப்போ, தலைநகர்)
9. ப்ரியா சேகரன் (செமிஞே, சிலாங்கூர்)
10. ஜெவித்தா டயான் தோமஸ் (செதாப்பாக், தலைநகர்)
11. தனசேகரன் மனோகரன் (ஆயர் தாவர், பேராக்)
12. மெலிஸா நாயகம் (ரவாங், சிலாங்கூர்)
13. திவியாஷினி பிரபாகரன் (ஈப்போ, பேராக்)
14. நவினா புகழேந்தி (ஜொகூர் பாரு, ஜொகூர்)
15. பிரவீன் நடராஜன் (பீடோர், பேராக்)
16. தீபன் மகேந்திரன் (பூச்சோங், சிலாங்கூர்)
17. பவித்ரன் சுப்ரமணியம் (ஈப்போ, பேராக்)
18. மோஜினி நாயர் ரவி (பெர்லிங், ஜொகூர்)
19. ஹரிதாஸ் ஜெய சங்கர் (குவாந்தான், பகாங்)
20. ரூஹன் ரவிந்திரன் (குவாந்தான், பகாங்)

மின்னலின் மின்னும் நட்சத்திரம் பட்டத்தை வெல்ல நடக்கும் இசையுத்தத்தில், இறுதிச் சுற்று மேடைக்கு தகுதி பெறப் போகும் அந்த எட்டு போட்டியாளர்கள் யார் என்ற கேள்வி மின்னல் பண்பலையின் நேயர்கள் மட்டுமல்லாது நடுவர்களிடமும் அதிகரித்துள்ளது. இவ்வேளையில், மின்னல் பண்பலை அரை இறுதிக்குத் தேர்வுப் பெற்ற போட்டியாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 5- ஆம் தேதி சனிக்கிழமை, அரை இறுதிப் போட்டிக்கான இசை யுத்தம் அங்காசபூரி, விஸ்மா ரேடியோவில் உள்ள ஆடிட்டோரியம் பி.ரம்லீயில் நடைபெறும். நேயர்கள் இந்த போட்டி குறித்த அண்மைய நிலவரங்களை தெரிந்துக் கொள்ள மின்னல் பண்பலையின் சமூக வலைத்தளங்களை பின் தொடரலாம்.