Home One Line P1 நீதிமன்ற வளாகம்: கூடல் இடைவெளி, முகக்கவசம் எங்கே? நூர் ஹிஷாம் வருத்தம்!

நீதிமன்ற வளாகம்: கூடல் இடைவெளி, முகக்கவசம் எங்கே? நூர் ஹிஷாம் வருத்தம்!

500
0
SHARE
Ad

கோலாலம்பூர்- ‘சுய கட்டுப்பாடு இல்லாமல் இதுபோன்ற சூழ்நிலையைப் பார்ப்பது வருத்தமாக இருக்கிறது’ .

நீதிமன்ற வளாகத்தில் நஜிப்பின் ஆதரவாளர்கள் கூடியிருந்த போது, கூடல் இடைவெளி மற்றும் முகக்கவசங்களை அணியாது இருந்ததைக் குறிப்பிட்டு சுகாதார அமைச்சு இயக்குனர் நூர் ஹிஷாம் அப்துல்லா இவ்வாறு தமது டுவிட்டர் பதிவில் பதிவிட்டுள்ளார்.

எப்போதும்  தமது முகநூல் பக்கத்தில், கூடல் இடைவெளி, முகக்கவசங்கள் அணிவது போன்ற நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளைப் பற்றி பேசும் முன்னாள் பிரதமரின் ஆதரவாளர்களே இம்முறை இந்த செயலை செய்துள்ளனர்.

#TamilSchoolmychoice

தனது டுவிட்டர் கணக்கில் இது குறித்து பதிவிட்ட நூர் ஹிஷாம் தமது ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார்.

“ஒவ்வொரு நாளும் சுகாதார அமைச்சகம் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளுக்கு இணங்குமாறு மக்களுக்கு நினைவூட்டுகிறது, குறிப்பாக கூடல் இடைவெளி, முகக்கவசங்கள் அணிந்துகொள்வது மற்றும் அடிக்கடி கை கழுவுதல் போன்றவற்றை கடைப்பிடிக்கக் கோருகிறது.

“சுய கட்டுப்பாடு இல்லாமல் இதுபோன்ற சூழ்நிலையைப் பார்ப்பது வருத்தமளிக்கிறது” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

இன்று நீதிமன்ற வளாகத்தில் சுமார் 1,000 பேர் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நஜிப்பின் நீதிமன்ற தீர்ப்பை அறிந்து கொள்வதற்கு 20 பேருந்துகளில், பெக்கானிலிருந்து நஜிப்பின் ஆதரவாளர்கள் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.