Home One Line P2 சூதாட்டத்தில் ஈடுபட்டதால் நடிகர் ஷாம் கைது!

சூதாட்டத்தில் ஈடுபட்டதால் நடிகர் ஷாம் கைது!

542
0
SHARE
Ad

சென்னை: நடிகர் ஷாம் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில், சூதாட்டத்தில் ஈடுபட்டதாக நடிகர் ஷாம் உள்பட 12 பேர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நடிகருக்கு சொந்தமான வீட்டிலிருந்து சூதாட்டத்திற்கு பயன்படுத்தப்பட்ட குறி அடையாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக புலனாய்வாளர்கள் தெரிவித்தனர்.

ஊரடங்கு காலத்தில் பல தமிழ் நடிகர்கள் இந்த சட்டவிரோத செயலில் ஈடுபட்டுள்ளதாகவும், வேறு நடிகர்கள் கைது செய்யப்பட்டார்களா என்பது இன்னும் தெளிவாக இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இதனிடையே, முன்னதாக இந்த சூதாட்டத்தில், பணத்தை இழந்த ஒரு நடிகரின் தகவலினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.