Home One Line P1 பெர்சாத்து முவாபாக்காட் நேஷனலுடன் இணைகிறது

பெர்சாத்து முவாபாக்காட் நேஷனலுடன் இணைகிறது

520
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தேசிய கூட்டணியை வலுப்படுத்த பெர்சாத்து கட்சி, அம்னோ, பாஸ் இடம்பெற்றுள்ள முவாபாக்காட் நேஷனலுடன் இணையும் என்று வட்டாரம் தெரிவித்துள்ளது.

நஜிப் வழக்கின் தீர்ப்பை அடுத்து, பெர்சாத்து தலைவருடனான அம்னோ, பாஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் நேற்றைய சந்திப்பில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“அம்னோ, பாஸ் கட்சி உடனான ஒத்துழைப்பை உறுதிப்படுத்த இந்த சந்திப்பு ஏற்படுத்தப்பட்டது

#TamilSchoolmychoice

“பிரதமர், அம்னோ தேசிய முன்னணியுடன் இணைந்து அடுத்த பொதுத் தேர்தலில் செயல்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்

“மேலும், பெர்சாத்து முவாபாக்காட் நேஷனலில் இணையும் என்றும் மொகிதின் தெரிவித்துள்ளார். தேர்தலின் போது தொகுதிப் பங்கீடுகள் நல்ல முறையில் நடக்க இது உதவும்” என்று அந்த வட்டாரம் தெரிவித்தது.

அண்மையில், நஜிப் ரசாக்கின் நீதிமன்றத் தீர்ப்பை அடுத்து, அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி “பெரிய அளவிலான அரசியல் முடிவுகள்” எடுக்கப்படலாம் என்று தெரிவித்திருந்தார்.

“பெர்சாத்து முவாபாக்காட் நேஷனலில் இணைவதன் மூலம், ஒத்துழைப்பை பலப்படுத்த முடியும்” என்று வட்டாரம் தெரிவித்தது.