Home One Line P2 ஏப்ரல் முதல் ஜூலை வரை 82,555 புதிய வணிகங்கள் தொடங்கப்பட்டன

ஏப்ரல் முதல் ஜூலை வரை 82,555 புதிய வணிகங்கள் தொடங்கப்பட்டன

600
0
SHARE
Ad

கோலாலம்பூர் :  கடந்த ஏப்ரல்  ஒன்றாம் தேதி தொடங்கி  ஜூலை 19 தேதி வரையில் மலேசிய  நிறுவன ஆணையத்தில் புதிதாக 82,555 புதிய வணிகங்கள் பதிவு செய்யப்பட்டன.

ஆணையத்தின் தரவுகளின் படி இந்த காலகட்டத்தில் மூடப்பட்ட வணிகங்களின் எண்ணிக்கையைவிட இவ்வாறு புதிதாக தொடங்கப்பட்ட வணிகங்களின் எண்ணிக்கை அதிகமாகும்.

உள்நாட்டு வாணிப பயனீட்டாளர் துணை அமைச்சர் டத்தோ ரோசோல் வாஹிட் இந்த தகவலை வெளியிட்டார்.

#TamilSchoolmychoice

மேற்குறிப்பிட்ட காலகட்டத்தில் நடப்பு வணிகங்களை மூடுவதற்காக 4,542 எண்ணிக்கையிலான விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றன. அதேவேளையில்  82,555 புதிய வணிகங்கள் 1956-ஆம் ஆண்டின் வணிக சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்டன.

இதன் மூலம், அந்த காலகட்டத்தில் மூடப்பட்ட வணிகங்களை விட புதிதாக தொடங்கப்பட்ட வணிகங்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம் என நேற்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில் துணை அமைச்சர் கூறினார்.

இந்த ஆண்டின் ஏப்ரல், மே, ஜூன், ஜூலை மாதங்களில் மூடப்பட்ட வணிகங்களின் எண்ணிக்கை எவ்வளவு என செராஸ் நாடாளுமன்ற  உறுப்பினர் டான் கோக் வாய் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்தக் கேள்விக்கு பதிலளிக்கும்போதே துணையமைச்சர் மேற்கண்ட விவரங்களை வெளியிட்டார்.

ஏப்ரல் முதல் ஜூலை வரை பதிவான புதிய வணிகங்களில் பெரும்பான்மையானவை இணைய வழி வணிகங்கள் சம்பந்தப்பட்டவையாகும்.   நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமுலில் இருந்த காரணத்தால் இந்த காலகட்டத்தில் பதிவான வணிகங்களில் பெரும்பான்மையானவை இணையவழி வணிகங்களாகும்.

பாரம்பரியமான கடைகள் இயங்குவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்ததால் இந்த காலகட்டத்தில் இணையவழி வணிகங்கள் பெருமளவில் அதிகரிக்கத் தொடங்கின, பரவத் தொடங்கின என்றும் துணை அமைச்சர் மேலும் தெரிவித்தார்.