Home One Line P1 சபா தேர்தல்: 45 தொகுதிகளில் சபா பெர்சாத்து போட்டி

சபா தேர்தல்: 45 தொகுதிகளில் சபா பெர்சாத்து போட்டி

522
0
SHARE
Ad

கோத்தா கினாபாலு: அடுத்த மாநிலத் தேர்தலில் 45 மாநில சட்டமன்றத் தொகுதிகளில் சபா பெர்சாத்து போட்டியிடத் தயாராக இருப்பதாக அதன் மாநிலத் தலைவர் டத்தோஸ்ரீ ஹாஜிஜி நூர் தெரிவித்தார்.

சபா பெர்சாத்து ஒரு நம்பகமான, தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப் பெறக்கூடிய வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் என்று அவர் கூறினார்.

“நாங்கள் தயாராக உள்ளோம். சபா பெர்சாத்து வேட்பாளர்கள் போட்டியிடும் 45 சட்டமன்றத் தொகுதிகளை அடையாளம் கண்டுள்ளோம்.

#TamilSchoolmychoice

“ஒவ்வொரு சபா சட்டமன்ற தொகுதியிலும் கட்சியின் தேர்தல் இயந்திரங்களை செம்மைப்படுத்த பெர்சாத்து அடுத்த வாரம் ஒரு கூட்டத்தை நடத்தும்” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அடுத்த தேர்தலில் வெற்றியை உறுதி செய்வதற்கான பலத்தை திரட்டுவதற்காக சபா தேர்தலை எதிர்கொள்ள தேசிய கூட்டணி, அம்னோ மற்றும் தேசிய முன்னணி கட்சிகளுடன் கலந்துரையாட சபா பெர்சாத்து  தயாராக உள்ளதாகவும் ஹாஜிஜி கூறினார்.

பெர்சாத்து கட்சி சபாவில் உள்ள மக்களுக்கு சிறந்த வாக்குறுதிகளையும், வழிநடத்துதலையும் வழங்கும் என்று அவர் கூறினார்.

கொவிட்19 நெருக்கடி மற்றும் தொற்றுநோய்க்குப் பிறகு மாநில பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் கவனம் செலுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பாதுகாப்பு, கல்வி, சமூக பொருளாதாரம், மக்களின் நல்வாழ்வு, இன ஒற்றுமை அம்சங்கள் கட்சி போராட்டத்தின் முன்னுரிமை என்று ஹாஜிஜி தெரிவித்தார்.

“இந்த மாநிலத்தில் வாழும் மக்கள் பாதுகாப்பாகவும், அமைதியாகவும், வசதியாகவும், வளமாகவும் இருப்பதை நாங்கள் உறுதி செய்வோம்.

“பெர்சாத்து சிறந்த மாற்றாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். மேலும், சபா மாநிலத்தை வழிநடத்த ஏராளமான மக்களால் ஏற்றுக்கொள்ளப்படும்” என்று அவர் கூறினார்.

பெர்சாத்து தேர்தல் அறிக்கை வேட்பு மனுவுக்கு முன்பே வெளியிடப்படும் என்று ஹாஜிஜி கூறினார்.