Home One Line P1 லெபனானில் மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்!

லெபனானில் மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்!

553
0
SHARE
Ad

பெய்ரூட்: லெபனானில் உள்ள அனைத்து மலேசியர்களும் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெய்ரூட்டில் உள்ள மலேசியத் தூதரகம் தனது ஆரம்ப அறிக்கையில் இதை உறுதிப்படுத்தியதாக வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் துன் ஹுசைன் தெரிவித்தார்.

செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் மலேசிய நேரத்தின்போது, லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் தீ விபத்து ஏற்பட்டு, துறைமுகத்தில் ஒரு கிடங்கில் பெரிய அளவிலான வெடிப்பு ஏற்பட்டது. அங்கு வெடிபொருள் சேமிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

#TamilSchoolmychoice

இந்த சம்பவத்தில் குறைந்தது 70 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 3,000- க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

அந்நாட்டில் வசிக்கும் மலேசியர்களை வீட்டுக்குள்ளேயே இருக்கும்படி தூதரகம் அறிவுறுத்தியுள்ளதாகவும் ஹிஷாமுடின் தெரிவித்தார்.

“லெபனானின மக்களுக்கு எங்கள் எண்ணங்களும், பிரார்த்தனைகளும். மலேசியா துக்கத்தில் உங்களுடன் ஒன்றாக நிற்கிறது. எங்களால் முடிந்த எந்த வகையிலும் ஆதரவளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம், ”என்று அவர் தனது சமீபத்திய டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், அதிபர் மைக்கேல் அவுன், 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் ஆறு ஆண்டுகளாக பாதுகாப்பற்ற முறையில் ஒரு கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

புதன்கிழமை அவசர அமைச்சரவைக் கூட்டத்தை அவர் திட்டமிட்டு, இரண்டு வார அவசரகால நிலையை அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

புதன்கிழமை முதல் மூன்று நாட்களுக்கு அதிகாரப்பூர்வ துக்க காலத்தை நாடு கடைபிடிக்கும்.

“நாம் ஒரு பெரிய பேரழிவை பார்த்துள்ளோம்” என்று லெபனானின் செஞ்சிலுவை சங்கத் தலைவர் ஜார்ஜ் கெட்டானி உள்ளூர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

“எல்லா இடங்களிலும் பாதிக்கப்பட்டவர்களும், உயிரிழப்புகளுமாக உள்ளது”

வெடிப்பிற்கான சரியான காரணத்தை கண்டறிய விசாரணை நடந்து வருவதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.

2013- ஆம் ஆண்டில் துறைமுகத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த கப்பலில் இருந்து அம்மோனியம் நைட்ரேட் இறக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் அங்குள்ள ஒரு கிடங்கில் அது சேமிக்கப்பட்டுள்ளது.