கோலாலம்பூர்: எந்தவொரு நடவடிக்கையையும் தீர்மானிப்பதற்கு முன்னர் நாட்டில் ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான (யு.என்.எச்.சி.ஆர்) அட்டையை வழங்குவதை அரசாங்கம் பரிசீலிக்கும் என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஹம்சா சைனுடின் தெரிவித்தார்.
இந்த விவகாரம் குறித்த ஆய்வு மற்றும் பரிசீலிப்பு விஸ்மா புத்ராவிடம் அடுத்த நடவடிக்கைக்கு சமர்ப்பிக்கப்படும் என்று அவர் கூறினார்.
“இது ஒரு நிலையான நிலையில் உள்ளது. காலப்போக்கில் யு.என்.எச்.சி.ஆர் அட்டைதாரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, இது நம் நாட்டில் பிரச்சனைகளை ஏற்படுத்தி வருகிறது” என்று அவர் கூறினார்.
அண்மையில், கொவிட்19 தொற்றுக் காலத்தில் அமல்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் போது, சட்டவிரோத குடியேறிகள் மற்றும் புலம்பெயர்ந்தோருக்கு எதிரான நடவடிக்கையை அரசு தொடங்கியது.
பலர் யு.என்.எச்.சி.ஆர் அட்டை வைத்துக் கொண்டு நாட்டில் பணிப்புரிந்து, வணிகம் செய்வது கண்டறியப்பட்டுள்ளது.