Home One Line P1 நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால், நம்பிக்கைக் கூட்டணி மாநில சட்டமன்றத்தைக் கலைக்காது

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால், நம்பிக்கைக் கூட்டணி மாநில சட்டமன்றத்தைக் கலைக்காது

578
0
SHARE
Ad

ஜோர்ஜ் டவுன்: நாடாளுமன்றம் கலைக்கப்படும் போது நம்பிக்கைக் கூட்டணி ஆட்சியில் உள்ள மாநிலங்களின் சட்டமன்றங்கள் கலைக்கப்படாது என்று அக்கூட்டனி முடிவு செய்துள்ளது.

பினாங்கு முதலமைச்சர் சௌ கோன் யோவ் கூறுகையில், நம்பிக்கைக் கூட்டணியின் தலைமையின் கீழ் உள்ள மாநிலங்கள் நிலையானவை என்றும், இரண்டு ஆண்டுகளில் தேர்தலுக்கு அழைப்பு விடுப்பது அவசர நடவடிக்கை என்றும் அவர் கூறினார்.

“சபாவில் எழுந்ததைப் போல சிறப்பு சூழ்நிலைகள் இல்லாவிட்டால், தேர்தல்கள் அழைக்கப்படாது

#TamilSchoolmychoice

“இந்த முடிவு ஒன்று அல்லது இரண்டு வாரங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டது. ஆனால் அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கும், எனவே இறுதி முடிவை எடுப்பதற்கு முன்பு இம்மாதிரியான சூழ்நிலைகளுக்கு மிக நெருக்கமாக இருக்க வேண்டும்.

“இது குறித்து பிரதமர் எப்போது முடிவெடுப்பார் என்பது எங்களுக்குத் தெரியவில்லை. ஆனால், சமீபத்திய நிலவரங்கள், சபாவில் திடீர் தேர்தல்களுடன் சேர்ந்து தேர்தல்கள் நடைபெற நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கான வாய்ப்பை நாங்கள் நிராகரிக்க முடியாது.

“நாட்டின் அரசியல் நிலைமை நிலையானது அல்ல, குறிப்பாக நாடாளுமன்றத்தில் குறுகியப் பெரும்பான்மையுடன் இருப்பதால் எதுவும் சாத்தியமாகும்.

“தற்போதைய கொவிட் 19 தொற்றுநோய் மற்றும் உதவிகள் முடிவுக்கு வருவதால், இது பொருளாதார நிலைத் தன்மைக்கு வழிவகுக்கும். வருமான இழப்பு மற்றும் வணிகங்கள் போன்ற எதிர்மறையான தாக்கங்களுக்கு வழிவகுக்கும்.

“எனவே, இப்போதைய நிலைமை நிச்சயமாக தேர்தல்களுக்கு ஒரு நல்ல நேரம் அல்ல,” என்று அவர் கூறினார்.