Home One Line P2 ஆஸ்ட்ரோ : ஆகஸ்ட் 5 முதல் 16 வரை ஒளியேறவிருக்கும் நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள்

ஆஸ்ட்ரோ : ஆகஸ்ட் 5 முதல் 16 வரை ஒளியேறவிருக்கும் நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள்

685
0
SHARE
Ad

கோலாலம்பூர் – ஆஸ்ட்ரோ தொலைக்காட்சி அலைவரிசைகளில் எதிர்வரும் ஆகஸ்ட் 5 முதல் ஆகஸ்ட் 16 வரை ஒளியேறவிருக்கும் சில நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்களை இங்கே காணலாம்:

புதன், 5 ஆகஸ்ட்

7ஆம் உயிர் (புதிய அத்தியாயம்3)

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), 9.00 இரவு | திங்கள்வெள்ளி | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.

#TamilSchoolmychoice

இத்தொடர் ஆவியால் ஆதிக்கம் செய்யப்பட்ட ஏழு இளம் சிறுமிகளின் கதையைச் சித்தரிக்கிறது.

ஓவியா (புதிய அத்தியாயம் – 424)

கலர்ஸ் தமிழ் எச்டி (அலைவரிசை 233), 7.30 இரவு | திங்கள்வெள்ளி | ஆஸ்ட்ரோ கோவில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.

இத்தொடர் வேறுபட்ட ஆளுமைகளைக் கொண்ட ஓவியா மற்றும் காயத்ரி இருவரைச் பற்றினக் கதை. காதல் ஆசை அவர்களின் நீண்டகால நட்பைச் சோதிக்கின்றது.

அம்மன் (புதிய அத்தியாயம் – 99)

கலர்ஸ் தமிழ் எச்டி (அலைவரிசை 233), 8.00 இரவு | திங்கள்வெள்ளி | ஆஸ்ட்ரோ கோவில் ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்

ஒரு அப்பாவி பெண் சக்தியின் கதையை மாய சக்தியுடன் சித்தரிக்கும் ஒரு அமானுஷ்ய சீரியல்.

இதயத்தை திருடாதே (புதிய அத்தியாயம் – 83)

கலர்ஸ் தமிழ் எச்டி (அலைவரிசை 233), 8.30pm  | திங்கள்வெள்ளி | ஆஸ்ட்ரோ கோ வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.

விதி ஒரு ஒழுக்கமற்ற ஆணையும் ஒரு ஒழுக்கமான பெண்ணையும் திருமண பந்தத்தில் இணைக்கிறது. இருப்பினும், இருவரும் தங்கள் திருமணத்திற்காக காலம் விளைவிக்கும் சோதனைகளை எதிர்கொள்ள பல தடைகளை கடக்க வேண்டியுள்ளது.

உயிரே (புதிய அத்தியாயம் – 99)

கலர்ஸ் தமிழ் எச்டி (அலைவரிசை 233), 9.00 இரவு | திங்கள்வெள்ளி | ஆஸ்ட்ரோ கோ வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

தனது மகளின் கர்ப்பத்தைப் பற்றி அறிந்தப் பிறகு, அரசியல் செல்வாக்கு கொண்ட இலட்சியம் படைத்த ஒரு தாய் தன் மகளின் காதலனைக் கொன்றுவிட்டு, மனைவியை இழந்து, ஐந்து வயது மகனுடன் வாழும் ஒரு ஆணை திருமணம் செய்துக் கொள்ளும்படி மகளைக் கட்டாயப்படுத்துகிறாள்.

சங்கடம் தீர்க்கும் சனீஸ்வரன் (புதிய அத்தியாயம் – 125)

கலர்ஸ் தமிழ் எச்டி (அலைவரிசை 233), 9.30 இரவு | திங்கள்வெள்ளி | ஆஸ்ட்ரோ கோ வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.

தனது குழந்தை பருவத்தில் பல கஷ்டங்களை எதிர்கொண்ட பிறகு, கோபத்திற்கு பெயர் பெற்ற சனி, தனது வழிகாட்டியான விஷ்ணு மற்றும் சிவபெருமானின் வழிகாட்டுதலை நாடுகிறார்.

வெற்றி விநாயகர் (புதிய அத்தியாயம் – 7)

கலர்ஸ் தமிழ் எச்டி (அலைவரிசை 233), 10.30 இரவு | திங்கள்வெள்ளி | ஆஸ்ட்ரோ கோ வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.

இத்தொடர் பால விநாயகர் இறைவனாக மாறியதன் அழகிய பயணத்தையும் அவரது தாயார் பார்வதி தேவியுடனான சிறப்புப் பிணைப்பையும் மிக அழகாக சித்தரிக்கின்றது.

திருமணம் (புதிய அத்தியாயம் – 426)

கலர்ஸ் தமிழ் எச்டி (அலைவரிசை 233), 11.30 இரவு | திங்கள்வெள்ளி | ஆஸ்ட்ரோ கோ வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.

தன் தேவைகளைப் பின்னுக்குத் தள்ளி மற்றவர்களின் தேவைகளை முன்னிருத்தும் கனிவான மற்றும் மென்மை குணம் கொண்ட ஜனனியால் பிணைக்கப்பட்டுள்ள இரண்டு குடும்பங்களின் வாழ்க்கையைப் பற்றிய ஒரு குடும்ப நாடகம்.

வியாழன், 6 ஆகஸ்ட்

பல் பல் தில் கே பாஸ் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

பாலிஒன் – BollyOne HD (அலைவரிசை 251), 9.00 இரவு 

நடிகர்கள்: கரண் தியோல், சஹர் பம்பா & சிமோன் சிங்

சுற்றுலா நிறுவனத்தின் உரிமையாளரான கரனை ஒரு மோசடிக்காரர் என்று நம்பும் வீடியோ பதிவர் சஹெர், அவரை அம்பலப்படுத்த ஒரு தனிப் பயணத்தை மேற்கொள்கிறார். ஒரு கசப்பான குறிப்பில் தொடங்கினாலும், நாளடைவில் அவர்கள் இருவரும் காதல் வயப்படுகின்றனர்.

பிம்பங்கள் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), 8.00 இரவு | திங்கள்வெள்ளி | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.

காதல் அன்பையும், வெறுப்பையும் பிரதிபலிக்கிறது. காதல் வெறுப்பை பிரதிபலிக்கும்போது என்ன நடக்கும்? நிஐ  வாழ்க்கையில் இடம்பெறும் வரை சித்தார்த்துக்கு வாழ்க்கை ரோஜாக்களின் படுக்கைப்போல் இருந்தது.

வெள்ளி, 7 ஆகஸ்ட்

வால்டர் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

ஆஸ்ட்ரோ தங்கத்திரை எச்டி (அலைவரிசை 241), 9.00 இரவு | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: சிபிராஜ், ஷிரின் காஞ்ச்வாலா, யோகி பாபு & சனம் ஷெட்டி

கும்பகோணத்தில் கைக்குழந்தைகளின் மர்மமான மரணத்தைத் தீர்க்கப் புறப்படும் ஒரு காவல்துறை அதிகாரி, குற்றத்திற்குப் பின்னால் ஒரு சில ஆதிக்கம் கொண்ட பெரியவர்கள் இருப்பதை உணர்கிறார்.

சனி, 8 ஆகஸ்ட்

ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா (புதிய அத்தியாயம்)

கலர்ஸ் தமிழ் எச்டி (அலைவரிசை 233), 8.00 இரவு| சனிஞாயிறு | ஆஸ்ட்ரோ கோ வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.

பகவான் கிருஷ்ணர் ஒரு குறும்புத்தனம் கொண்ட குழந்தையாக வளர்வதோடு மதுரா மற்றும் துவாரகாவின் இளவரசராக இருக்கிறார். தீய சக்திகளை எதிர்த்துப் போராடுவதற்கும் ஒழிப்பதற்கும் மற்றும் அனைவருக்கும் நீதி வழங்குவதற்கும் அவர் பல சாகசங்களை புரிகிறார்.

சந்திரகாந்தா (புதிய அத்தியாயம்33)

கலர்ஸ் தமிழ் எச்டி (அலைவரிசை 233), 9.00 இரவு | சனிஞாயிறு | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.

விஜய்கரின் இளவரசி சந்திரகாந்தா தனது உண்மையான அடையாளத்தையும் கடந்த காலத்தையும் அறிந்திருக்கவில்லை. இருப்பினும், நவுகரின் இளவரசரான வீர் அவளது வாழ்க்கையில் நுழையும் போது, ​​அவள் விதியை உணர்ந்து அதை நிறைவேற்றப் புறப்படுகிறாள்.

பாகுபலி தி லாஸ்ட் லெஜண்ட்ஸ் (புதிய அத்தியாயம் – 11)

ஆஸ்ட்ரோ வானவில் எச்டி (அலைவரிசை  201), 7.30 இரவு | சனி | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.

இரண்டு அரச இளவரசர்கள், தங்கள் தகுதியை நிரூபிக்கவும் ஒரு நாள் கிரீடத்தை அணிவதற்கும் காவிய சாகசங்களை புரிவதோடு மகிழ்மதியின் சாம்ராஜ்யத்தை ஆட்சி செய்வதற்கும் போட்டியிடுகின்றனர்.

நக்கீரன்காசே தா கடவுளப்பா (புதிய அத்தியாயம் – 19)

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), 9.00 இரவு| ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.

இவ்வத்தியாயங்கள் நிதி விஷயங்கள், வணிக வாய்ப்புகள் மற்றும் வணிகத்தில் ஈடுபடுபவர்கள் எதிர்கொள்ளும் தடைகள் போன்றவற்றைச் சித்தரிக்கும்.

ஞாயிறு, 9 ஆகஸ்ட்

வாட்ச்மேன் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

கலர்ஸ் தமிழ் எச்டி (அலைவரிசை 233), 7.00 இரவு | ஆஸ்ட்ரோ கோ வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.

கடன்களைக் கொண்ட ஒரு ஆண் வட்டி முதலையிடம் தன் கடன்களை அடைக்க ஒரு பங்களாவிலிருந்து பணத்தைத் திருட முடிவு செய்கிறான். இருப்பினும், அவன் முதலில் காவல் நாயை சமாளிக்க வேண்டியுள்ளது.

நலம் அறிய ஆவல் (புதிய அத்தியாயம் – 9)

ஆஸ்ட்ரோ வானவில் எச்டி (அலைவரிசை  201), 11.00 காலை [மறுஒளிபரப்பு 8.00 இரவு] | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.

மைக்கோபக்டீரியம் எனப்படும் பக்டீரியாவால் ஏற்படும் காசநோயைப் பற்றியது இவ்வத்தியாயம். இந்த விஷயத்தில் சரியான மற்றும் தேவையான உணவுகளைப் பற்றி ஓர் உணவியல் நிபுணர் பகிர்ந்துக் கொள்வார். மருத்துவ அம்சங்களைத் தவிர, காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவக்கூடிய பொருத்தமான யோகாசனங்களையும் இந்த அத்தியாயம் உள்ளடக்கும்.

திங்கள், 10 ஆகஸ்ட்

7ஆம் உயிர் (புதிய அத்தியாயம்6-10)

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), 9.00 இரவு| திங்கள்வெள்ளி | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.

இத்தொடர் ஆவியால் ஆதிக்கம் செய்யப்பட்ட ஏழு இளம் சிறுமிகளின் கதையைச் சித்தரிக்கிறது.

வியாழன், 13 ஆகஸ்ட்

சபாக் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

பாலிஒன் எச்டி – BollyOne HD (அலைவரிசை 251), 9.00 இரவு 

நடிகர்கள்: தீபிகா படுகோன் & விக்ரந்த் மஸ்ஸி

ஆசிட்  தாக்குதலுக்கு பலியான மால்டி, மனரீதியாக குணமடைய முயற்சிக்கும்போது நீதிமன்ற நடைமுறை சோதனைக்கு செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார். இந்த செயல்முறைக்கு உட்படுத்தப்படுகையில், ஆசிட் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களின் நீதிக்காக போராட முடிவு செய்கிறார்.

வெள்ளி, 14 ஆகஸ்ட்

கன்னி மாடம் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

ஆஸ்ட்ரோ தங்கத்திரை எச்டி (அலைவரிசை 241), 9.00 இரவு | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: சாயா தேவி, ஸ்ரீராம் கார்த்திக் & முருகதாஸ்

மதுரையைச் சேர்ந்த தம்பதியினர் தங்கள் உயிரைக் காக்க சென்னைக்குத் தப்பி ஓடும் கதை.

சனி, 15 ஆகஸ்ட்

தி லெஜன்ட் ஓவ் பகத் சிங் (The Legend of Bhagat Singh) (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

இந்தியாவின் சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சி.

கலர்ஸ் ஹிந்தி எச்டி (அலைவரிசை 116), 10 இரவு  | ஆஸ்ட்ரோ கோ வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: அஜய் தேவ்கன், சுஷந்த் சிங், அம்ரித்த ராவ் & ராஜ் பப்பர்

இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக ஆயுதமேந்திய, எதிர்ப்பை எழுப்பிய ஓர் இளம் புரட்சியாளரின் கதை.

பாகுபலி தி லாஸ்ட் லெஜண்ட்ஸ் (புதிய அத்தியாயம் – 13)

ஆஸ்ட்ரோ வானவில் எச்டி (அலைவரிசை  201), 7.30 இரவு| சனி | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.

இரண்டு அரச இளவரசர்கள், தங்கள் தகுதியை நிரூபிக்கவும் ஒரு நாள் கிரீடத்தை அணிவதற்கும் காவிய சாகசங்களை புரிவதோடு மகிழ்மதியின் சாம்ராஜ்யத்தை ஆட்சி செய்வதற்கும் போட்டியிடுகின்றனர்.

நக்கீரன்ஜாதிகள் தேவையா பாப்பா? (புதிய அத்தியாயம் – 21)

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), 9.00 இரவு | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.

‘ஜாதி’ என்ற தலைப்பு வரும்போது மலேசியர்களின் மனநிலை, கருத்து, நிலைப்பாடு போன்றவற்றை இந்த அத்தியாயங்கள் சித்தரிக்கும்.

ஞாயிறு, 16 ஆகஸ்ட்

நலம் அறிய ஆவல் (இறுதி அத்தியாயம் – 10)

ஆஸ்ட்ரோ வானவில் எச்டி (அலைவரிசை  201), 11.00 காலை [மறுஒளிபரப்பு 8pm]| ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.

இந்த அத்தியாயம் நுரையீரல் புற்றுநோயை மையமாகக் கொண்டது. ஒரு நபரின் சுவாசத் திறனைக் குறைக்கும் கட்டிகளின் வளர்ச்சியைப் பற்றி நுரையீரல் நிபுணர் விளக்குவார். அதன்பிறகு உணவியல் நிபுணர் சரியான உணவு முறைகளைக் குறித்து விளக்குவார். இந்நிலையில் உள்ளவர்களுக்கு உதவக்கூடிய பொருத்தமான யோகாசனங்களையும் இந்த அத்தியாயம் உள்ளடக்கும்.

பின்குறிப்பு : மேற்குறிப்பிட்ட நிகழ்ச்சிகள் இறுதிநேர மாற்றத்திற்கு உட்பட்டவை