Home One Line P1 துன் மகாதீர் புதிய கட்சியைத் தொடங்கினார்!

துன் மகாதீர் புதிய கட்சியைத் தொடங்கினார்!

713
0
SHARE
Ad

கோலாலம்பூர்: டாக்டர் மகாதீர் முகமட்  புதிய கட்சி ஒன்றை அமைப்பதாக அறிவித்தார். ஆயினும், அதற்கான பெயர் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று அவர் கூறினார்.

இப்புதிய கட்சிக்கு முக்ரிஸ் மகாதீர் தலைவராக இருப்பார் என்று இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.

இப்புதிய கட்சி எந்தவொரு கட்சியுடனும் பிணைக்கப்படாது என்றும், ஊழலை ஒழிப்பதற்கான போராட்டத்தை  அடிப்படையாகக் கொண்டு இயங்கும் என்றும் அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

இதற்கிடையில், இன்று தமது சமூகப் பக்கங்களில் தமது புதிய படங்களை துன் மகாதீர் பதிவேற்றியிருந்தார். மேல் இணைக்கப்பட்டுள்ள படம் அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

“எங்கள் அசல் போராட்டத்தைத் தொடர, நாங்கள் சுதந்திரமாக இருக்க வேண்டும் அல்லது புதிய கட்சி உறுப்பினர்களாக வேண்டும்.

“மலாய்க்காரர்கள் அடிப்படையாகக் கொண்ட கட்சிகள் இருந்தாலும், தேசத்தின் கௌரவம், மதம் மற்றும் அதிகாரத்திற்காக ஏங்குபவர்களினால் போராட்டத்தின் திசையை தகர்த்துவிடுகிறது” என்று இன்று செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.