கோலாலம்பூர்: சபா மாநிலத் தேர்தல் தொடர்பாக ஆகஸ்ட் 17 அன்று சிறப்பு கூட்டம் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
தேர்தல் ஆணையத்தின் செயலாளர் இக்மால்ருடின் இஷாக் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனைத் தெரிவித்தார். தேர்தல் ஆணையத் துணைத் தலைவர் டாக்டர் அஸ்மி சரோம் தலைமையில் காலை 9 மணிக்கு கோத்தா கினபாலுவின் தி மாகெல்லன் சுடேரா ரிசார்ட்டில் சந்திப்புக் கூட்டம் நடைபெறும் என்று அவர் கூறினார்.
தேர்தல் வேட்பாளர் நியமனம் நாள், வாக்களிக்கும் நாள், வாக்காளர் பதிவு போன்ற தேர்தல் விஷயங்களின் முக்கியமான தேதிகள் மற்றும் தேர்தலை நடத்துவதற்கு தேவையான பிற ஏற்பாடுகள் குறித்து விவாதிப்பதே இந்த சிறப்புக் கூட்டம் என்று அவர் கூறினார்.
சபா ஆளுநர் துன் ஜுஹார் மஹிருடினின் ஒப்புதலைப் பெற்றப் பின்னர், சபா முதல்வர் டத்தோஸ்ரீ முகமட் ஷாபி அப்டால் ஜூலை 30-ஆம் தேதி சபா மாநில சட்டமன்றத்தை கலைப்பதாக அறிவித்தார்.