Home One Line P2 விக்ரமின் புதியத் தோற்றம் பரவலாகப் பேசப்படுகிறது

விக்ரமின் புதியத் தோற்றம் பரவலாகப் பேசப்படுகிறது

623
0
SHARE
Ad

சென்னை: தன்னை தனது தந்தையின் மிகப்பெரிய இரசிகர் என்று  கூறிக் கொள்ளும்  துருவ் விக்ரம், விக்ரமின் பிரத்யேக புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

பதிவிடப்பட்ட கருப்பு வெள்ளை புகைப்படத்தில், நடிகர் விக்ரம் முற்றிலுமாக திடகாத்திரத்துடன் காணப்படுகிறார். புகைப்படத்தில் ஒரு தடிமனான தாடி மற்றும் நீண்ட முடியுடன் நடிகர் காணப்படுகிறார்.

இந்த புகைப்படம் துருவால் வெளியிடப்பட்டவுடன், சமூக ஊடகங்களில் பரலாகிவிட்டது. விக்ரம் இரசிகர்கள் அவரது தோற்றத்தைப் பற்றி பாராட்டிப் பேசி வருகின்றனர்.

#TamilSchoolmychoice

இதற்கிடையில், அவரது வரவிருக்கும் படங்களான ‘கோப்ரா’ மற்றும் ‘துருவ நட்சத்திரம்’ வெளியீட்டிற்காக இரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இயக்குனர் கௌதம் மேனன் இயக்கியுள்ள ‘துருவ நச்சத்திரம்’ படத்தில், ஜான் என்ற பெயரில் ஓர் இரகசிய புலனாய்வாளர் பாத்திரத்தில் விக்ரம் நடிக்கிறார்.

இதற்கிடையில், அஜய் ஞானமுத்து இயக்கிய விக்ரமின் ‘கோப்ரா’ குறித்தும் இரசிகர்களுக்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது. ஊரடங்கு உத்தரவு அகற்றப்படுவதற்கு குழு காத்திருக்கிறது. ஒரு மாதத்திற்கு முன்பு, இப்படத்தின் ‘தும்பி துள்ளல்’ தனிப்பாடல் வெளியிடப்பட்டது. இப்போது அது ஆறு மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.