Home One Line P2 கொவிட்19: ஒரு நாள் இறப்பு விகிதத்தில் பிரேசில் முதல் நிலையில் உள்ளது

கொவிட்19: ஒரு நாள் இறப்பு விகிதத்தில் பிரேசில் முதல் நிலையில் உள்ளது

607
0
SHARE
Ad

சாவ் பாலோ: கொவிட்19 தொற்றால் பிரேசில் கிட்டத்தட்ட 100,000 இறப்புகளைப் பதிவு செய்துள்ளதாக சுகாதார அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 1,079 இறப்புகள் பதிவாகியுள்ளதாகவும், இறப்பு எண்ணிக்கை 99,572- ஆகப் பதிவாகி இருப்பதாகவும் அது தெரிவித்துள்ளது.

50,230 புதிய கொவிட்19 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மொத்த சம்ப்வங்களின் எண்ணிக்கை 2,962,442- ஆக உயர்ந்துள்ளதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, இந்த வாரம் ஒரு நாள் இறப்புகளுக்கு பிரேசில் உலகின் முதல் இடத்தைப் பிடித்ததாகக் கூறியது.

சாவ் பாலோ மாநிலத்தில் 24,735 இறப்புகளும், ரியோ டி ஜெனிரோவில் 14,028 இறப்புகளும், சியாராவில் 7,921 இறப்புகளும் பதிவாகி உள்ளன.