Home One Line P2 அபிஷேக் பச்சன் கொவிட்19 தொற்றிலிருந்து விடுவிப்பு

அபிஷேக் பச்சன் கொவிட்19 தொற்றிலிருந்து விடுவிப்பு

523
0
SHARE
Ad

மும்பை: பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் இறுதியாக கொவிட் 19 தொற்றிலிருந்து விடுபட்டுள்ளார். ஆகஸ்டு 8- ஆம் தேதி அவர் மருத்துவமனையிலிருந்து வெளியேறினார்.

44 வயதான அவர் , அவரது தந்தை அமிதாப், (77 வயது), ஜூலை 12 அன்று கொவிட் 19 தொற்றுக்கு சாதகமாக பரிசோதிக்கப்பட்டனர். சில நாட்களுக்குப் பிறகு, அபிஷேக்கின் மனைவியும் நடிகையுமான ஐஸ்வர்யா ராய், 46, மற்றும் அவர்களது எட்டு வயது மகள் ஆராத்யாவும் இந்த தொற்றுக்கு ஆளாகினர்.

“இன்று (ஆகஸ்ட் 8) பிற்பகல் நான் கொவிட் 19 தொற்றிலிருந்து விடுபட்டுள்ளேன். இதை நான் வெல்வேன் என்று சொன்னேன்” என்று தமது டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் அவர் செய்தியைப் பதிவிட்டார்.

#TamilSchoolmychoice

“எனக்கும் எனது குடும்பத்துக்கும் நீங்கள் செய்த பிரார்த்தனைகளுக்கு அனைவருக்கும் நன்றி. நானாவதி மருத்துவமனையின் மருத்துவர்கள் மற்றும் தாதிகள், ஊழியர்களுக்கு அவர்கள் செய்த அனைத்திற்கும் எனது நித்திய நன்றி.” என்று அவர் கூறினார்.

ஆகஸ்ட் 2-ஆம் தேதி அமிதாப் பச்சன் மருத்துவமனையிலிருந்து வெளியேறினார்.  ஜூலை 27- ஆம் தேதி ஐஸ்வர்யா மற்றும் ஆராத்யா ஆகியோர் நோயிலிருந்து விடுபட்டனர்.