Home One Line P2 ராகா வானொலியில் சிறப்பு நிகழ்ச்சிகள்

ராகா வானொலியில் சிறப்பு நிகழ்ச்சிகள்

928
0
SHARE
Ad

கோலாலம்பூர் : மலேசியாவின் முதன்மை தமிழ் வானொலியாகத் திகழும் ராகாவின் சில சிறப்பு நிகழ்ச்சிகள் குறித்த விவரங்களை இங்கே காணலாம்:

செவ்வாய், 11 ஆகஸ்ட்

ஆஸ்ட்ரோ ஊழியர்களுடன் ஒரு நாள்

ராகா, 6 – 10am | SYOK செயலியில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

#TamilSchoolmychoice

சுரேஷும் அஹிலாவும் ஆஸ்ட்ரோ ஊழியர்களுடன் ஒரு பணியாளராக எவ்வாறு சீராக ஒருங்கிணைந்து செயல்படுவது என்பது குறித்து ஒரு சுவாரசியமான கலந்துரையாடலை மேற்கொள்வர். மலேசியக் கலைஞர் குபேன் மகாதேவன்  மற்றும்  சுரேஷ் ஆரோக்கியமாக எடையைக் குறைக்கும் வழிமுறைகளைப் பகிர்ந்துக் கொள்ள ‘பெல்லி சவால்’ தொடரும்.

புதன், 12 ஆகஸ்ட்

நேர்காணல்: சீராகச் செயல்படுவதன் மூலம் ஒருவர் எவ்வாறு கட்டமைப்போடும் ஆரோக்கியமாகவும் இருக்க முடியும்?

ராகா, 6 – 10am | SYOK செயலியில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

விருந்தினர்: திரு. டினேஸ், முன்னாள் ரக்பி விளையாட்டு வீரர்

சீராகச் செயல்படுவதன் முக்கியத்துவத்தையும், அப்பழக்கம் எவ்வாறு ஒருவரின் கட்டமைப்பிற்கும் ஆரோக்கியத்திற்கும் வழிவகுக்கும் என்ற விபரங்களையும் முன்னாள் ரக்பி வீரரான திரு. டினேஸ் பகிர்ந்துக் கொள்கிறார்.

வியாழன், 13 ஆகஸ்ட்

இம்மாத மலேசிய நட்சத்திரம், மண்ணின் மைந்தர், லிங்கேஸ்வரன் மணியமுடன் ஒரு நாள்

ராகா, 7 – 10am | SYOK செயலியில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

மலேசியக் கலைஞரான லிங்கேஸ்வரன் மணியம் 3 மாதங்களில் 15 கிலோ எடையைக் குறைத்த தனது அனுபவத்தைப் பற்றிப் பகிர்ந்துக் கொள்வார்.

வெள்ளி, 14 ஆகஸ்ட்

சீராக செயல்படுவர்களின் 10 பழக்க வழக்கங்கள்

ராகா, 6 – 10am | SYOK செயலியில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

சுரேஷும் அஹிலாவும் சீராக செயல்படுவர்களின் 10 பழக்க வழக்கங்களைப் பற்றி பகிர்ந்துக் கொள்வர். தொடரும் ‘பெல்லி சவாலை’ முன்னிட்டு DrY & DrS Fitness Centre -இன் பயிற்றுனர் டாக்டர் ஷாலினி ராமச்சந்திரனின் நேரலை ஸும்பாவை இரசிகர்கள் ராகாவின் இன்ஸ்டாகிராம் வழியாக கண்டு களிக்களாம்.

* நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள் மற்றும் அதன் விபரங்கள் மாற்றத்திற்கு உட்பட்டவை