Home One Line P1 குவான் எங், மனைவி சியூ, பாங், அம்லாவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டனர்

குவான் எங், மனைவி சியூ, பாங், அம்லாவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டனர்

857
0
SHARE
Ad

பட்டர்வொர்த்: ஊழல் குற்றச்சாட்டில் பினாங்கு முன்னாள் முதல்வர் லிம் குவான் எங் மற்றும் தொழிலதிபர் பாங் லி கூன் ஆகியோர் இன்று செவ்வாய்க்கிழமை அமர்வு நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர்.

நீதிபதி அகமட் அஸ்ஹாரி அப்துல் ஹமீட் முன்னிலையில் குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்ட பின்னர் லிம், 60, மற்றும் பாங், 48, இருவரும் குற்றத்தை மறுத்து விசாரணைக் கோரினர்.

லிம் பினாங்கு முதலமைச்சர் மற்றும் பினாங்கு மேம்பாட்டுக் கழக சலுகைகள் வாரியத்தின் தலைவர் என்ற நிலையைப் பயன்படுத்தி, எக்செல் சொத்து மேலாண்மை மற்றும் ஆலோசனை நிறுவனம் மூலம் அவரது மனைவி பெட்டி சியூ கெக் செங்கிற்கு 372,009 ரிங்கிட்டை இலஞ்சமாகப் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

11,610,000 ரிங்கிட் மதிப்புள்ள, லாட் 631, முகிம் 13, ஜூரு, செபெராங் பெராய் தெங்கா மற்றும் லாட் 282, முகிம் 13, பத்து காவான், செபெராங் பெராய் செலாதான், ஆகிய இடங்களில் உள்ள “முன்மொழியப்பட்ட தொழிலாளர் கிராமத்திற்கு அழைப்பிதழ்” வழங்கப்படுவதை உறுதிசெய்ய நடவடிக்கை எடுத்ததன் மூலம் லிம் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதில் சியூ மறைமுகமாக ஈடுபட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

பினாங்கு ஜார்ஜ் டவுனில், பினாங்கு முதலமைச்சர் அலுவலகத்தில் இக்குற்றத்தைப் புரிந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டம் 2009 (எம்ஏசிசி) இன் பிரிவு 23 (1)- இன் கீழ் இந்த குற்றச்சாட்டு தாக்கல் செய்யப்படுகிறது. இது அதே சட்டத்தின் பிரிவு 24 (1)- இன் கீழ் தண்டனைக்குரியது. இந்தக் குற்றச்சாட்டுக்கு 20 ஆண்டுகளுக்கு மிகாமல் சிறைத்தண்டனையும், இலஞ்சத் தொகையிலிருந்து ஐந்து மடங்குக்கு குறையாத அபராதமும் விதிக்கப்படும்.

பாங், அதே இடத்தில், தேதியில் இந்த குற்றத்தைப் புரிவதற்கு  லிம்மிற்கு துணையாக இருந்ததாக குறிப்பிடப்பட்டார். அதே பிரிவு மற்றும் குற்றச்சாட்டின் கீழ் அவர் தண்டிக்கப்படலாம்.

56 வயதான சியூ, ஒரு நிறுவனத்திடமிருந்து தனது வங்கிக் கணக்கில் 372,009 ரிங்கிட்டை, ஏற்றுக்கொண்டதன் தொடர்பில் சுமத்தப்பட்ட மூன்று பண மோசடிக் குற்றச்சாட்டுகளில் தான் குற்றவாளி அல்ல என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

மூன்று குற்றச்சாட்டுகளிலும், அவர் பணமோசடியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தலா 87,009 ரிங்கிட் தொகையைப் பெற்றது, எக்செல் சொத்து மேலாண்மை மற்றும் ஆலோசனை நிறுவனத்தின் சட்டவிரோத நடவடிக்கைகளின் விளைவாக  180,000 ரிங்கிட் மற்றும் 105,000 ரிங்கிட்டை அவரது பப்ளிக் பேங்க் கணக்கில் செலுத்தப்பட்ட குற்றத்திற்காக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

2013-ஆம் ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி, 2014-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4-ஆம் தேதி வரை, 2014-ஆம் ஆண்டு செப்டம்பர் 3 மற்றும் 2015-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11 வரையிலும், 2015 செப்டம்பர் 4 மற்றும் 2016 மார்ச் 3 ஆகிய தேதிகளிலும் பப்ளிக் பேங்கில் வெவ்வேறு தேதிகளில் இந்த குற்றங்கள் அவர் மீது சுமத்தப்பட்டன.

பணமோசடி தடுப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நிதிச் சட்டம் 2001- இன் பிரிவு 4 (1) (அ) இன் கீழ் குற்றச்சாட்டுகள் தாக்கல் செய்யப்படுகின்றன. இது அதே சட்டத்தின் பிரிவு 4 (1)- இன் கீழ் தண்டனைக்குரியது. இந்தக் குற்றச்சாட்டுக்கு 5 மில்லியன் ரிங்கிட்டுக்கு அதிகமான  அபராதம் அல்லது சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது.