வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் திங்கட்கிழமை பிற்பகல் வெள்ளை மாளிகைக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடந்ததாகக் கூறப்பட்டதை அடுத்து, கொவிட்19 பத்திரிகையாளர் மாநாட்டில் இருந்து இரகசிய காவலர்களால் தற்காலிகமாக அழைத்துச் செல்லப்பட்டார்.
“ஓர் உண்மையான துப்பாக்கிச் சூடு நடந்தது, யாரோ ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார், அந்த நபரின் நிலை எனக்குத் தெரியாது” என்று அதிபர் வெள்ளை மாளிகையின் செய்தியாளர் அறைக்கு சில நிமிடங்கள் கழித்து திரும்பிய பின்னர் கூறினார்.
“நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதாக தெரிகிறது” என்று டிரம்ப் கூறினார். “சந்தேக நபர் சுடப்பட்டார்.” என்று அவர் மேலும் கூறினார்.
அவர் வெளியேற்றப்பட்டபோது ஓவல் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இரகசிய காவலர்கள் அறைக்குள் வந்து அவரை வெளியேறச் சொன்னபோது டிரம்ப் செய்தியாளர் சந்திப்பில் முதல் வரியை வாசிக்கத் தொடங்கினார்.