Home One Line P1 முகக்கவசத்தின் விலை ஒரு ரிங்கிட்டாக குறைப்பு

முகக்கவசத்தின் விலை ஒரு ரிங்கிட்டாக குறைப்பு

529
0
SHARE
Ad

கோலாலம்பூர்: முகக்கவசத்தின் விலை தற்போது ஒரு ரிங்கிட்டாக குறைக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு வணிக மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சர் அலெக்சாண்டர் நாந்தா லிங்கி தெரிவித்தார்.

முன்னதாக, இது தொடர்பான ஒரு செய்தியாளர் சந்திப்பில், தற்போது 1 ரிங்கிட் 20 காசாக உள்ள முகக்கவசத்தின் விலை குறைக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

“நாங்கள் 1 ரிங்கிட் 20 காசுக்குக் கீழ் விற்கலாம் என்று முடிவு செய்துள்ளோம்” என்று அவர் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

ஆகஸ்டு 1 முதல், பொது இடங்கள் மற்றும் பொது போக்குவரத்துகளில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டதை அடுத்து அதன் விலையை 1 ரிங்கிட் 50 காசிலிருந்து 1 ரிங்கிட் 20 காசாக அரசு குறைத்தது.

இக்கட்டளைக்கு இணங்க மறுக்கும் நபர்களுக்கு எதிராக, சட்டம் 342 (தொற்று நோய்களைத் தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் சட்டம் 1988)- இன் கீழ் 1,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்படும் என்று அரசு குறிப்பிட்டிருந்தது, அதன்படி அதன் அமலாக்கம் தற்போது செய்லபடுத்தப்பட்டு வருகிறது.