பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல்-15 முன்னாள் சிலாங்கூர் மாநில முன்னாள் மந்திரி பெசாரும், அம்னோவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான டான்ஸ்ரீ முகமட் தாயிப் பாஸ் கட்சியில் இணையவுள்ளார் என்று தற்போது தகவல்கள் வெளியாகின்றன.
கடந்த 1986ஆம் ஆண்டு முதல் 1990ஆம் ஆண்டு வரை சிலாங்கூர் மாநில மந்திரி பெசாராகவும், கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் 2003 ஆம் ஆண்டு வரை அம்னோவின் உதவித் தலைவராகவும் பதவி வகித்து வந்தவர் முகமட் தாயிப்.
இவர் சென்ற வாரம், பாஸ் கட்சியின் உதவித்தலைவர் டத்தோஸ்ரீ முகமட் நிஸார் ஜமாலுதினை சந்தித்தார். அச்சந்திப்பின் போது பாஸ் கட்சியில் இணையுமாறு அவருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாக அறியப்படுகிறது.
முகமட் தாயிப் ஆஸ்திரேலியாவிற்கு சுற்று பயணம் மேற்கொண்டபோது, சிட்னி விமான நிலையத்தில் அவர் கொண்டு சென்ற மொத்த பணத்தையும் மூடி மறைத்து விட்டார் என்று குற்றம் சாட்டப்பட்டு, அதை ஆஸ்திரேலியா நீதிமன்றமும் உறுதி செய்ததால்,கடந்த1998ஆம் ஆண்டு ஏப்ரல் 11ஆம் தேதி அவர் மாநில மந்திரி பெசார் பதவியில் இருந்து விலகினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.