Home நாடு அம்னோ பொன் முட்டைகள் இடும் வாத்து – முகமட் தாயிப் கருத்து!

அம்னோ பொன் முட்டைகள் இடும் வாத்து – முகமட் தாயிப் கருத்து!

711
0
SHARE
Ad

muhammad taib-ex selangor MBகோலாலம்பூர் – அம்னோவிற்கே தான் மீண்டும் திரும்பியது குறித்து முன்னாள் சிலாங்கூர் மந்திரி பெசார் முகமட் தாயிப் இன்று திங்கட்கிழமை செய்தியாளர்களிடம் விளக்கமளித்தார்.

சுமார் 50 நிமிடங்கள் நீடித்த அந்தச் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய முகமட் தாயிப், நாட்டின் அரசியல் மலாய்க்காரர்களிடம் இருக்க வேண்டும் என்ற நோக்கில் அம்னோவிற்குத் திரும்பியதாகக் குறிப்பிட்டார்.

“அரசியலில் மலாய்க்காரர்கள் தங்களது பிடியைத் தளர்த்தினால், கிராமங்களில் வாழும் மலாய்க்காரர்களை யார் பார்த்துக் கொள்வார்கள்?” என்று முகமட் தாயிப் கேள்வி எழுப்பினார்.

#TamilSchoolmychoice

தான் எதிர்கட்சியான பாஸ் கட்சியில் இணைந்து பின், பிகேஆர் கட்சிக்குத் தாவி, அம்னோவிற்கு வருவதற்கு முன்பு வரை, மலாய்க்காரர்கள் பற்றி யாரும் கலந்தாலோசிக்கவில்லை என்றும் முகமட் தாயிப் தெரிவித்தார்.

மேலும், அம்னோ பொன் முட்டைகள் இடும் வாத்து என்றும் முகமட் தாயிப் குறிப்பிட்டார்.