Home One Line P1 பினாங்கில் முதல் யூடிசி மையம் ஆகஸ்டு 17-இல் செயல்படும்

பினாங்கில் முதல் யூடிசி மையம் ஆகஸ்டு 17-இல் செயல்படும்

511
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பினாங்கில் முதல் நகர்ப்புற உருமாற்ற மையம் (யுடிசி) இந்த திங்கட்கிழமை கொம்தாரில் அதன் சேவையை ஆரம்பிக்கும்.

கொம்தாரின் மூன்றாம் மாடியில் யூடிசி நடவடிக்கைகளைத் தொடங்க நிதி அமைச்சகம் முன்னுரிமை அளித்துள்ளது என்று முதல்வர் சௌ கோன் இயோ தெரிவித்தார்.

“இதுவரை, 10 அரசு நிறுவனங்கள் பினாங்கு யூடிசியில் செயல்படத் தொடங்கும், அவற்றில் பொது சேவைகள் துறை, குடிநுழைவுத் துறை, சாலைப் போக்குவரத்துத் துறை, உள்நாட்டு வருமான வரித் துறை மற்றும் தெனாகா நேஷனல் ஆகியவை அடங்கும்.

#TamilSchoolmychoice

“விரைவில் காவல் துறை, ஜோப்ஸ் மலேசியா மற்றும் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு அமைச்சகம் ஆகியவற்றை எதிர்பார்க்கலாம்” என்று அவர் இன்று செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

செயல்பாட்டு நேரம் காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை, திங்கள் முதல் வெள்ளி வரை மற்றும் வார இறுதி நாட்களில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை என்று அவர் கூறினார்.

“யூடிசி, மத்திய / மாநில பொது விடுமுறைகளைத் தவிர ஒவ்வொரு நாளும் செயல்படும், மேலும் வெள்ளிக்கிழமை தவிர பிறக் கிழமைகளில் மதியம் 12.15 முதல் பிற்பகல் 2.45 வரை இடைவெளிகள் இருக்காது” என்று அவர் கூறினார்.