Home One Line P1 கொவிட்19: கெடா தாவார் தொற்றுக் குழுக் காரணமாக 11 பேருக்கு பாதிப்பு

கொவிட்19: கெடா தாவார் தொற்றுக் குழுக் காரணமாக 11 பேருக்கு பாதிப்பு

471
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 20 புதிய கொவிட்19 தொற்று சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

இதைத் தொடர்ந்து நாட்டின் மொத்த கொவிட்19 பாதிப்பு எண்ணிக்கை 9,149-ஆக உயர்ந்துள்ளது.

புதிதாக அடையாளம் காணப்பட்ட 20 சம்பவங்களில் 7 பேர் வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பியவர்கள் ஆவர். மேலும், 13 பேர் உள்நாட்டிலேயே தொற்றுக் கண்டுள்ளனர். கெடாவில் தாவார் தொற்றுக் குழுக் காரணமாக 11 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

பத்து பேர் கெடாவிலும், மேலும் ஒருவர் பினாங்கிலும் இந்த தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். சுகாதார அமைச்சு இந்த தொற்று எவ்வாறு ஏற்பட்டது என்பதை விசாரித்து வருகிறது. மேலும், புதிதாக முடா தொற்றுக் குழுவும் கெடாவில் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இன்று 7 பேர் குணமடைந்து வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 8,828 -ஆக உயர்ந்துள்ளது.

நாட்டில் மொத்தம் 196 பேர் இன்னும் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் நால்வர் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அதில் ஒருவருக்கு சுவாசக் கருவி உதவித் தேவைப்படுகிறது.