Home One Line P1 கெடாவிற்குச் செல்லும் பாதைகள் மூடப்பட்டது எனும் செய்தி போலி

கெடாவிற்குச் செல்லும் பாதைகள் மூடப்பட்டது எனும் செய்தி போலி

537
0
SHARE
Ad

அலோர் ஸ்டார்: கெடாவில் கொவிட்19 தாவார் தொற்றுக் குழு காரணமாக ,  ஜாலான் கெரிக்-குபாங், கெரிக்கிலிருந்து பாலிங் மாவட்டம் வரையிலான பாதை மூடப்பட்டதாகக் கூறப்படும் செய்திகளை காவல் துறை இன்று மறுத்தது.

பேராக்-கெடா நுழைவுப் பாதையை காவல்துறையினர் மூடவில்லை என்றும், பரலாகி வந்த புகைப்படம் நேற்று காவல் துறையினர் மேற்கொண்ட ஒருங்கிணைந்த நடவடிக்கையின் போது எடுக்கப்பட்டது என்று கெரிக் மாவட்ட காவல் துறைத் தலைவர் சுப்கிப்லி மஹ்மூட் தெரிவித்தார்.

“இந்த நடவடிக்கை குறுகிய நேரம் மட்டுமே நடைபெற்றது. மேலும் இது போக்குவரத்து குற்றங்கள் மற்றும் பலவற்றை சரிபார்க்க வேண்டும்.

#TamilSchoolmychoice

“இந்த போலி செய்திகளை பரப்பிய நபர்களையும் காவல் துறை கண்காணித்து வருகின்றனர். மேலும் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக சட்டம் 1988- இன் கீழ் அபராதம் விதிக்கப்படலாம்  என்பதால் இதுபோன்ற செய்திகளைப் பகிர வேண்டாம் என்று பொதுமக்களுக்கு நினைவூட்டப்படுகிறது,” என்று அவர் கூறினார்.

தகவல்களை சரிபார்க்க விரும்புவோர் கெரிக் மாவட்ட காவல் துறை தலைமையக செயல்பாட்டு அறையை 05-7911222 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.