59 வயதான இயக்குனர், சட்டவிரோத வணிகங்கள் மற்றும் சூதாட்ட நடவடிக்கைகளைப் பாதுகாக்கும் கும்பலைச் சேர்ந்தவரா என்பதை எம்ஏசிசி விசாரிக்கும்.
காலை 10 மணியளவில் எம்ஏசிசி தலைமையகத்தில் கைது செய்யப்பட்ட அவர், தடுத்து வைப்பதற்காக புத்ராஜெயா கீழ்நிலை நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
எம்ஏசிசி துணை தலைமை ஆணையர் (செயல்பாடுகள்) அகமட் குசைரி யஹாயா அவர்கள் கைது செய்யப்பட்டதை உறுதிப்படுத்தினார்.
இன்று முன்னதாக, வணிகங்களிலிருந்து மாதாந்திர இலஞ்சம் வசூலிக்கும் அமலாக்க அதிகாரிகள் மேலும் மூன்று பேர் கைது செய்யப்பட்டதை எம்ஏசிசி உறுதிப்படுத்தியது.
Comments