Home One Line P1 புதிய விதிமுறைகளின் கீழ் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது

புதிய விதிமுறைகளின் கீழ் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது

527
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று காலை அமைச்சரவைக் கூட்டம் ‘புதிய விதிமுறைகளின்’ சூழலில் நடந்தது. அமைச்சரவை உறுப்பினர்களிடையே தடைகள் அமைக்கப்பட்டு இன்றையக் கூட்டம் நடைபெற்றது.

பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசினின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் இது குறித்து பதிவிடப்பட்டிருந்தது. இந்த நடவடிக்கை கொவிட்19 நோய்த்தொற்றின் அபாயத்தைக் குறைக்கும் முயற்சியில், அமைச்சர்களிடையே தடையை உருவாக்கி கூடல் இடைவெளியை பராமரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

“அமைச்சரவையின் அனைத்து அமைச்சர்களும் ஒரே அறையில் ஒன்றுகூடி நேருக்கு நேர் சந்திப்பது இதுவே முதல் முறையாகும்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இந்த கூட்டத்தில் அனைத்துலக வணிக மற்றும் தொழில்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலி, தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப், பொதுப்பணி அமைச்சர் டத்தோஸ்ரீ பாடில்லா யூசோப் மற்றும் கல்வி அமைச்சர் டாக்டர் ராட்சி ஜிடின் ஆகிய நான்கு முதன்மை அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.