Home One Line P2 பாடும் நிலா எஸ்.பி.பாலா கவலைக்கிடம் – வாடும் இரசிகர்கள்

பாடும் நிலா எஸ்.பி.பாலா கவலைக்கிடம் – வாடும் இரசிகர்கள்

1089
0
SHARE
Ad

சென்னை – பாடும் நிலா என இரசிகர்களால் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமா இரசிகர்களால் கொண்டாடப்பட்டு வந்த பாடகர், நடிகர், இசையமைப்பாளர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்.

சில நாட்களுக்கு முன்னர் கொவிட்-19 தொற்று கண்டு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார் எனத் தகவல்கள் வெளிவந்தன.

அதைத் தொடர்ந்து இன்றையத் தகவல்களின்படி அவரது உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக தமிழக ஊடகங்கள் தகவல்கள் வெளியிட்டுள்ளன.

#TamilSchoolmychoice

கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி எஸ்.பி.பி என சுருக்கமாக அழைக்கப்படும் பாலசுப்பிரமணியத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. உடனடியாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

சென்னை அமைந்தகரையில் உள்ள எம்ஜிஎம் தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது உடல்நலம் குறித்து பலரும் அழைத்து விசாரிக்கத் தொடங்கியதால் அவரே காணொளி ஒன்றில் பேசி அதனை சமூக ஊடகங்களில் வெளியிட்டார்.

எனினும் இன்று அவரது உடல்நலம் மோசமடைந்துள்ளதாகவும், கவலைக்கிடமான நிலைமையில் அவர் இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்திருப்பது அவரது இரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.