Home One Line P1 “மஇகா தேசிய முன்னணியோடுதான் இணைந்திருக்கும், பெரிக்காத்தானோடு அல்ல”

“மஇகா தேசிய முன்னணியோடுதான் இணைந்திருக்கும், பெரிக்காத்தானோடு அல்ல”

998
0
SHARE
Ad

கோலாலம்பூர் : “மஇகா அம்னோவுடனும், பாரம்பரியக் கூட்டணியான தேசிய முன்னணியோடு மட்டுமே இணைந்திருக்கும். மாறாக, பெரிக்காத்தான் நேஷனல் என்று அழைக்கப்படும் தேசியக் கூட்டணியோடு தற்போதைக்கு இணையாது” என மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் அறிவித்தார்.

நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகலில் மஇகா தலைமையகத்தில் நடைபெற்ற மஇகா மத்திய செயலவைக் கூட்டத்திற்குப் பின்னர் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் விக்னேஸ்வரன் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

“கடந்த முறை இலங்காவி தீவில் நடைபெற்ற மத்திய செயலவையின்போது தேசியக் கூட்டணியோடு இணைந்திருப்போம் என முடிவெடுத்தோம். ஆனால் அதற்குப் பின்னர் நிகழ்ந்த சில அரசியல் சம்பவங்களைத் தொடர்ந்து அம்னோ தேசியக் கூட்டணியோடு (பெரிக்காத்தான் நேஷனல்) இணையப் போவதில்லை என முடிவெடுத்தது. முவாபக்காட் நேஷனல் கூட்டணியை வலுப்படுத்தவும் தேசிய முன்னணியைத் தொடர்ந்து நிலைநிறுத்தவும் அம்னோ அறிவித்தது. அதைத் தொடர்ந்து நாங்களும் அம்னோவுடனும், தேசிய முன்னணியோடும் எங்களின் அரசியல் பயணத்தைத் தொடர்வோம். தற்போதைக்கு தேசியக் கூட்டணியில் இணைய மாட்டோம். கால ஓட்டத்தில் அம்னோ, தேசிய முன்னணி சக தலைவர்களோடு எதிர்கால முடிவுகளை எடுப்போம்” என்றும் விக்னேஸ்வரன் அறிவித்தார்.