Home One Line P1 கெடாவில் புதிய தொற்று, காவல் துறை அதிகாரியிடமிருந்து ஆரம்பித்துள்ளது

கெடாவில் புதிய தொற்று, காவல் துறை அதிகாரியிடமிருந்து ஆரம்பித்துள்ளது

450
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நேற்று வெள்ளிக்கிழமை நாட்டில் 20 புதிய சம்பவங்களுடன் புதிய தொற்றுக் குழு கண்டறியப்பட்டுள்ளது.

இது கெடாவில் உள்ள முடா தொற்றுக் குழு என்று சுகாதார இயக்குநர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

“இந்த தொற்றுக் குழு ஒரு காவல் துறை அதிகாரரிடமிருந்து தோன்றியது.

#TamilSchoolmychoice

“இதைத் தொடர்ந்து,  இந்த தொற்றுக் குழு தொடர்புகளைக் கண்டறிதல் மேற்கொள்ளப்பட்டது. ஆகஸ்ட் 13 அன்று நெருங்கிய தொடர்பு சம்பந்தமான பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 14 அன்று தொற்று கண்டறியப்பட்டது,” என்று அவர் நேற்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

124 நெருங்கிய தொடர்புகள் பரிசோதிக்கப்பட்டதாக டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்தார்.

124 பேரில், இதுவரை இரண்டு பேர் பாதிப்புக்குள்ளாகி இருப்பதும், ஐந்து பேருக்கு பாதிப்பில்லை என்றும் அவர் கூறினார். மேலும், 117 பேர் இன்னும் தங்கள் முடிவுகளுக்காக காத்திருக்கிறார்கள் என்று அவர் கூறினார்.

“இந்த தொற்றுக் குழுவில் உள்ள அனைத்து சம்பவங்களும் மலேசியர்கள். இந்த தொற்றுக் குழு அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் கிருமி நீக்கம் மற்றும் தூய்மைப்படுத்துதல் போன்ற தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன, ” என்று அவர் குறிப்பிட்டார்.

நோய் தொற்றுக்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளது.