மனாமா: அண்மையில் சமூகப் பக்கங்களில் பஹ்ரைனில் விநாயகர் சிலைகளை சேதப்படுத்தும் பெண்ணின் காணொளி பரவலாகப் பகிரப்பட்டது.
அப்பெண் மீது தற்போது இது தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
வேண்டுமென்றே சேதம் விளைவித்ததாகவும், மத அடையாளத்தை பகிரமங்கமாக அவமதித்ததாவகவும் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக பஹ்ரைன் உள்துறை அமைச்சகம் வெளியட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் மனாமாவில் உள்ள ஜூபைர் பகுதியில் ஒரு கடையில் உள்ள மத சிலைகளை வேண்டுமென்றே 54 வயது பெண் ஒருவர் உடைப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அந்த பெண்ணுக்கு காவல் துறை சம்மன் அனுப்பியது.
அந்த பெண் சிலைகளை சேதப்படுத்தியதாக ஒப்புக்கொண்டார். இதையடுத்து, குற்றவியல் சேதங்களை விளைவித்ததாகவும், மத அடையாளத்தை அவமதித்ததாகவும் அவர் குற்றம் சாட்டப்பட்டார்.
தொடர்ந்து, அவர் நீதிமன்றத்தால் விசாரிக்கப்படுவார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த காணொளியில், இரு பெண்கள் உள்ளனர். ஒருவர் விநாயகர் சிலைகளை வீசி உடைப்பது பதிவாகி உள்ளது. இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரவலான கண்டனத்தை ஏற்படுத்தியது.