கோலாலம்பூர் : ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் ஆகஸ்ட் 31, இரவு 9 மணிக்கு ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டியில் (அலைவரிசை 231) மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ராப் போர்க்களத்தின் மாபெரும் இறுதிச் சுற்றைக் கண்டு களிக்கலாம்.
ஆரம்பக் காலகட்டத்தில், இந்த மாபெரும் இறுதிச் சுற்றின் தொலைக்காட்சி முதல் ஒளிபரப்பு (பிரீமியர்) முந்தைய ஒரு தேதியில் திட்டமிடப்பட்டிருந்தாலும், COVID-19 தொற்றுநோய் காரணமாக நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (MCO) அமல்படுத்தப்பட்டபோது மற்றொரு தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
கம்பீரமான கே.எல்.சி.சி (KLCC) இரட்டை கோபுரங்களின் பின்னணியில், சிறந்த ஐந்து இறுதிச் சுற்று போட்டியாளர்களான ஈஷா, டெசல்டெக், மதராசி, சி.ஜே.எல் மற்றும் நரேன் ஜாக் இடையே நடந்த முற்றிலும் சுவாரசியமான யுத்தத்தை இரசிகர்கள் கண்டு களிக்கலாம்.
ராப் போர்க்களத்தின் மாபெரும் இறுதிச் சுற்று, மலேசிய ஹிப்-ஹாப் முன்னோடி மற்றும் ராப் போர்க்களத்தின் பிற சுற்றுகளின் நீதிபதியான எம்சி ஜெஸ் மற்றும் ராகா அறிவிப்பாளர் கோகுலனால் தொகுத்து வழங்கப்படும். மேலும், விருது பெற்ற இசை தயாரிப்பாளர், நவின் நேவிகேட்டர் மற்றும் புகழ்பெற்ற உள்ளூர் பாடகர் சசி தி டான் ஆகியோரும் இந்த அத்தியாயத்தில் இடம் பெறுவர்.
முதல் நிலையில் வாகை சூடுபவர் 5,000 ரிங்கிட் ரொக்கப் பரிசை வீட்டிற்குத் தட்டிச் செல்வதோடு Sony Music Malaysia-வுடன் இணைந்து தனது முதல் இசைத்தட்டு தொகுப்பை (சிங்களை) வெளியீடு செய்வார்.
அதே வேளையில், இரண்டாம் நிலையில் வெற்றி பெறுபவர் 2,000 ரிங்கிட் ரொக்கப் பரிசை வீட்டிற்கு எடுத்துச் செல்வதோடு அவரது விருப்பத்திற்கு இணங்க Sony Music Malaysia-வுடன் இணைந்து தனது முதல் இசைத்தட்டு தொகுப்பை (சிங்களை) வெளியீடு செய்யும் வாய்ப்பு வழங்கப்படும்.
இரசிகர்கள் அனைத்து முந்தைய அத்தியாயங்களையும் ஆகஸ்ட் 29 வரை தினமும் இரவு 9.30 மணிக்கு மற்றும் ஆகஸ்ட் 30-ஆம் தேதி மதியம் 1 மணிக்கு ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டியில் (அலைவரிசை 231) கண்டு இரசிக்கலாம். அதுமட்டுமின்றி, ஆஸ்ட்ரோ உலகம் அகப்பக்கம் மற்றும் சமூக வலைத்தளங்கள் வழியாக ஆகஸ்ட் 30 வரை தினமும் பிற்பகல் 2 மணி முதல் இரசிகர்கள் அனைத்து முந்தைய அத்தியாயங்களையும் கண்டு களிக்கலாம். அனைத்து அத்தியாயங்களையும் ஆஸ்ட்ரோ ஆன் டிமாண்ட் வழியாக இரசிகர்கள் எப்போது வேண்டுமானாலும் பதிவிறக்கம் (ஸ்ட்ரீமிங்) செய்து மகிழலாம்.