Home One Line P2 நேரலை விளையாட்டுகள் ஆஸ்ட்ரோவின் வியூக ரீதியான வளர்ச்சித் தூண்களாக விளங்குகின்றன

நேரலை விளையாட்டுகள் ஆஸ்ட்ரோவின் வியூக ரீதியான வளர்ச்சித் தூண்களாக விளங்குகின்றன

692
0
SHARE
Ad

கோலாலம்பூர் : அல்ட்ரா பெட்டியில் 4K UHD மூலம் பிரீமியர் லீக்கின் புதிய பருவ காற்பந்து விளையாட்டுகளை ஆஸ்ட்ரோ  கோ வாயிலாக ஒருபோதும் – ஒரு விளையாட்டையும் தவறவிடாதீர்கள் என ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்களை கேட்டுக் கொண்டுள்ளது.

  • பிரீமியர் லீக் மற்றும் பல நேரலை விளையாட்டு நிகழ்ச்சிகளின் மிக விரிவான கவரேஜ் (coverage)
  • HD மற்றும் 4K UHD-இல் பதிவிறக்கம் (ஸ்ட்ரீமிங்) மற்றும் ஆன் டிமாண்ட் உள்ளடக்கத்துடன் நேரலை போட்டி விளையாட்டுகளைக் கண்டு மகிழும் ஒரு சிறந்த பார்வை அனுபவம்
  • மெய்நிகர் சந்திப்பு & வாழ்த்து மற்றும் பிரத்தியேக பொருட்களுடன் (merchandise) சிறந்த இரசிகர்களின் ஈடுபாடு
  • சிறந்த விளையாட்டுகளின் புதுப்பிக்கப்பட்ட தகவல்கள் (updates)

கோலாலம்பூர் : ஜர்கன் குளோப் (Jurgen Klopp) அணி கிரீடத்தை பாதுகாக்க போராடவே, பிரீமியர் லீக் பட்டத்திற்கான 30 ஆண்டுகால வேட்டைக்கு பின்னர், லீவர்பூல் (Liverpool) தற்பொழுது மென்செஸ்டர் சிட்டி (Manchester City), மென்செஸ்டர் யுனைடெட் (Manchester United) மற்றும் செல்சீ (Chelsea) போன்ற குழுக்களால் 2020/21 பருவத்தில் (சீசனில்) வேட்டையாடப்படுகிறது.

ஆஸ்ட்ரோ விளையாட்டு அலைவரிசை தொகுப்பின் (Astro Sports Pack) மூலம் புதிய பருவம் (சீசன்) 12 செப்டம்பர் 2020-இல் தொடங்குகிறது, காற்பந்து இரசிகர்கள் பிரீமியர் லீக்கின் ஒவ்வொரு தருணத்தையும் முன் வரிசை இருக்கையில் இருந்தவாறு அனுபவிக்க முடியும்.

யுவன் ஸ்மித்
#TamilSchoolmychoice

குழுவின் முதன்மைச் செயல்வினை அலுவலர் (COO) மற்றும் ஆஸ்ட்ரோ தொலைக்காட்சியின்  தலைமை நிர்வாக அதிகாரி (CEO) யுவன் ஸ்மித் (Euan Smith) கூறுகையில்: “மிகவும் ஈடுபாடு மற்றும் ஆர்வமுள்ள எங்கள் பார்வையாளர்களில் விளையாட்டு இரசிகர்களும் அடங்குவர். நேரலை விளையாட்டுக்கள் திரும்ப வருகையில், உலகெங்கிலுமிருந்து மிகப்பெரிய விளையாட்டு நிகழ்ச்சிகளுடன் மலேசிய விளையாட்டு இரசிகர்களுக்கு சேவை செய்வதில் ஆஸ்ட்ரோ வலுப்பெறுவதோடு உற்சாகமாகவும் உள்ளது. பிரீமியர் லீக்கை விட பெரிய மற்றும் அற்புதமான காற்பந்து லீக் எதுவும் இல்லை. மிகவும் விரிவான நேரலைகளை வழங்குவதைத் தவிர, எங்கள் அல்ட்ரா பெட்டி மற்றும் அகண்ட அலைவரிசை (பிராட்பேண்ட்) மூலம் இணையற்ற 4K UHD-இல் நேரலை போட்டி விளையாட்டுகளை வழங்குகிறோம். அதன் மூலம் காற்பந்து பார்வை அனுபவத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்கிறோம். எங்கள் ஆஸ்ட்ரோ கோ துணைச் செயலிகள் இருக்கையில் வாடிக்கையாளர்கள் விளையாட்டு தருணத்தை ஒருபோதும் இழக்க வேண்டியதில்லை. மாறாக, பிரத்தியேக பிரீமியர் லீக் நிகழ்ச்சிகளை அவர்கள் ஆன் டிமாண்ட் வாயிலாக எங்கும் எப்போதும் அவர்கள் விருப்பப்படி பதிவிறக்கம் (ஸ்ட்ரீமிங்) செய்து மகிழலாம்” என்றார்.

“தற்போதைய உலகளாவிய சூழ்நிலையில் நாங்கள் பயணிக்கையில், வாடிக்கையாளர்களையும் விளையாட்டு இரசிகர்களையும் மெய்நிகராக ஈடுபடுத்த புதிய வழிகளைக் கண்டுபிடிப்பது ஆஸ்ட்ரோவுக்கு இன்றியமையாத ஒன்று என்பதை நாங்கள் நினைவில் கொள்கிறோம். விளையாட்டுகளின் வளர்ச்சியை நாங்கள் காண்கிறோம். எனவே, மின்னியல் களத்தில் மதிப்பு மற்றும் வருவாயை ஈட்ட புதிய வழிகளில் கடுமையாக முயற்சிக்கிறோம்” என்றும் அவர் மேலும் கூறினார்.

பிரீமியர் லீக் காற்பந்து போட்டிகள் சிறந்த முறையில் நேரலை ஒளிபரப்பில்...

மலேசியாவில் அதிகாரபூர்வ மற்றும் பிரத்தியேக பிரீமியர் லீக் ஒளிபரப்பாளராக, ஆஸ்ட்ரோ, விளையாட்டு இரசிகர்களுக்கு அனைத்து 380 போட்டி விளையாட்டுகளையும் தொலைக்காட்சி மற்றும் ஆஸ்ட்ரோ கோ வாயிலாக கொண்டு வருகிறது.

நேரலை விளையாட்டுகள் மீண்டும் வருகையில், ஆஸ்ட்ரோ தனது வாடிக்கையாளர்களுக்கு பிரீமியர் லீக், லா லிகா, Ligue 1 மற்றும் Serie A போன்ற மிகப்பெரிய உலகளாவிய விளையாட்டு நிகழ்வுகளையும், Formula 1, Moto GP, UFC, NBA போன்ற பிற விளையாட்டுகளையும் வழங்கி மீண்டும் சேவை புரிவதில் மகிழ்ச்சி அடைகிறது.

ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் இப்போது ஸ்டார்ட்டர் தொகுப்பிலிருந்து (Starter Pack) விளையாட்டு அலைவரிசை தொகுப்பைச் (Sports Pack) சேர்க்கும் வாய்ப்புடன் அதிக மதிப்பு மற்றும் விருப்பம்போல் மாற்றுத் தேர்வு செய்யும்  வாய்ப்பைப் பெறுகின்றனர், இதனால் இரசிகர்கள் 11 எச்டி அலைவரிசைகளில் உலகளாவிய நிலையில் விளையாட்டு நிகழ்ச்சிகளைப் பார்க்க முடியும்.

சிறந்த பார்வை அனுபவம்

தேர்ந்தெடுக்கப்பட்ட பிரீமியர் லீக் நேரலை விளையாட்டுகளை எச்டியை விட 4 மடங்கு (4X) அதிக தெளிவை வழங்கும் 4K UHD-இல் காண ஆஸ்ட்ரோ அல்ட்ரா பெட்டியுடன் சிறந்த பார்வை அனுபவத்தைப் பெறுங்கள்.

அல்ட்ரா பெட்டியை ஆஸ்ட்ரோ பிராட்பேண்டுடன் இணைத்தல் உள்ளடக்கத்தை ஆன் டிமாண்டில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்ய  இயலுவதோடு ஊடாடும் திறனையும் (interactivity) ஏற்படுத்தும். புதிய ஆஸ்ட்ரோ அனுபவத்தில் கிளவுட் பதிவு, சாதனங்களுக்கிடையே தடையின்றி செயல்படும் புதிய பயனர் இடைமுகம், விளையாட்டைப் பார்க்கும் வரலாற்றின் (sports viewing history) அடிப்படையில் மேம்படுத்தப்பட்ட உள்ளடக்க பரிந்துரைகள், நேரலை விளையாட்டின் தொடக்கத்திலிருந்து ஒளியேறுதல் மற்றும் ஒரே நேரத்தில் பல நேரலை விளையாட்டு நிகழ்ச்சிகளை பதிவு செய்யும் திறன் ஆகியவை அடங்கும்.

‘Boot Out Piracy’ பிரச்சாரத்தின் வழி திருட்டைத் துடைத்தொழிக்க பிரீமியர் லீக்குடன் ஆஸ்ட்ரோ இணைந்து பங்கெடுக்கிறது.

ஆஸ்ட்ரோவுடன் இணைந்து, பிரீமியர் லீக் அடுத்த வாரம் தனது முதல் திருட்டு எதிர்ப்பு பிரச்சாரமான ‘Boot Out Piracy’ஐ தொடங்கவுள்ளது. தகவல் திருட்டு மற்றும் மோசடிக்கு வழிவகுக்கும் மல்வேர் (malware) மற்றும் ரன்சம்வேர் (ransomware) போன்ற சட்டவிரோத பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) வழி போட்டி விளையாட்டுகளைப் பார்க்கும்போது இரசிகர்கள் எதிர்கொள்ளும் அபாயங்கள் மற்றும் சமரசம் செய்யும் பார்வைத் தரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, மின்னியல் தளங்களில் இயங்கும் இவ்விளம்பர பிரச்சாரம்.

பிரீமியர் லீக் ஒளிபரப்பு இயக்குனர் போல் மோல்னர் (Paul Molnar) கூறுகையில்: “எங்களின் மலேசிய இரசிகர் பட்டாளம் எங்களுக்கு மிகவும் முக்கியமானவர்கள் மற்றும் ஒவ்வொரு வாரமும் பிரீமியர் லீக் மற்றும் எங்கள் கிளப்புகளைப் பின்பற்றும் விசுவாசமான ஆதரவாளர்கள் எங்களிடம் உள்ளனர். ஆஸ்ட்ரோ ஒரு தசாப்தத்திற்கும் மேலாக மதிப்புமிக்க கூட்டாளராக இருந்து வருகிறது. எங்கள் போட்டிகளின் விரிவான நேரலையை (கவரேஜை)  வழங்குவதோடு லீக், எங்கள் கிளப்புகள் மற்றும் வீரர்களுடன் இரசிகர்களை ஈடுபடுத்துவதில் பெரும் பங்கு வகிக்கிறது.

“அதிகாரப்பூர்வ ஆஸ்ட்ரோ ஒளிபரப்பு அலைவரிசைகள் வழியாக சிறந்த பிரீமியர் லீக் பார்வை அனுபவத்தை அனுபவிக்க ரசிகர்களை ஊக்குவிக்கும் புதிய பிரச்சாரத்தைத் தொடங்க நாங்கள் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சியடைகிறோம்.”

சிறந்த இரசிகர்களின் ஈடுபாடு

சி.கே லீ

ஆஸ்ட்ரோவின் விளையாட்டுப் பிரிவுத் தலைவர் சி.கே லீ கூறுகையில்: “இரசிகர்கள் விளையாட்டு மீதான ஆர்வத்தை வெளிப்படுத்தவும், அவர்களின் விருப்பமான விளையாட்டு வீரர்களுடனான ஈடுபாட்டை வெளிக்கொணரவும் ஆஸ்ட்ரோ தொடர்ந்து புதிய வழிகளை தேடி வருகிறது. மின்னியல் வழிச் செல்வதன் மூலம், பிரீமியர் லீக் காற்பந்து வீரர்கள் மற்றும் நிபுணத்துவ வல்லுநர்களுடன் மெய்நிகர் சந்திப்பு மற்றும் வாழ்த்து என பணத்தால் வாங்க இயலாத அனுபவத்தை எங்களால் வழங்க முடிகிறது. மேலும், ஆஸ்ட்ரோ சூப்பர்ஸ்போர்ட் (Astro SuperSport) அறிவிப்பாளர்கள் மற்றும் திறமைசாலிகளுடன் நேரலை விளையாட்டுகளை கண்டு மகிழும் வாய்ப்பையும் பிரத்தியேக பொருட்களை வெல்லும் வாய்ப்பையும் தவறாமல் அறிந்துக் கொள்ளுங்கள்” என்றார்.

சிறந்த விளையாட்டுகளின் புதுப்பிப்புகள் (updates)

லீ தொடர்ந்து கூறுகையில், “Fanzone, The Kelly & Wrighty Show, அன்றாட பிரீமியர் லீக், போட்டிக்கு முந்தைய நிகழ்ச்சிகள், போட்டிக்கு பிந்தைய விவாதங்கள் மற்றும் போட்டியின் சிறப்பம்சங்கள் போன்ற 500 மணிநேர ஆதரவளிக்கும் நிகழ்ச்சிகளுடன் பிரீமியர் லீக்குடன் புதுப்பித்த நிலையில் இருங்கள். மேலும், ஸ்டேடியம் ஆஸ்ட்ரோவில் சமீபத்திய செய்திகளை பெறுவதோடு நேர்காணல்களையும் கண்டு களியுங்கள்” என்றும் தெரிவித்தார்.

ஆஸ்ட்ரோ விளையாட்டு அலைவரிசை தொகுப்பைப் பற்றிய மேல் விபரங்களுக்கு www.astro.com.my எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.