Home One Line P2 இரஷியாவின் கொவிட்-19 தடுப்பு மருந்து நம்பிக்கை தருகிறது

இரஷியாவின் கொவிட்-19 தடுப்பு மருந்து நம்பிக்கை தருகிறது

684
0
SHARE
Ad

மாஸ்கோ : இரஷியா கண்டுபிடித்திருக்கும் கொவிட்-19 தடுப்பு மருந்து, முதல் கட்ட பரிசோதனைகளின் மூலம், நல்ல நம்பிக்கையைத் தந்திருப்பதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதல் கட்ட பரிசோதனைகளில் கலந்து கொண்ட பங்கேற்பாளர்களுக்கு உடல் ரீதியான தடுப்பு சக்தி இந்த மருந்தின் மூலம் செலுத்தப்பட்டது. அவர்களில் யாருக்கும் குறிப்பிடத்தக்க பக்கவிளைவுகள் ஏற்படவில்லை என்பது பரிசோதனை முடிவுகளின் மூலம் தெரிய வந்திருக்கிறது.

எனினும் சில நாடுகள் இரஷியாவின் கொவிட்-19 தடுப்பு மருந்து மீது இன்னும் நம்பிக்கை கொள்ளவில்லை.

#TamilSchoolmychoice

கொவிட்-19 பாதிப்புகள் தொடங்கியதிலிருந்து அமெரிக்கா, சீனா, ஐரோப்பிய நாடுகள், இந்தியா ஆகிவை தடுப்பு மருந்தைக் கண்டுபிடிப்பதில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கின.

ஆனால் முதன் முதலாக இரஷியாதான் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவித்தது.

இந்தியாவும் தாங்கள் ஒரு தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்திருப்பதாகவும் அதற்கான பரிசோதனைகளை நடத்தி வருவதாகவும் அறிவித்திருக்கிறது.

இரஷிய உளவுத் துறை மூலம் மேற்கத்திய நாடுகளின் கொவிட்-19 தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு தொடர்பான தகவல்களை இரஷியா முறைதவறி ஊடுருவிப் பெற்றிருக்கிறது என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்திருக்கின்றன.

எனினும் இரஷியா இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்திருக்கிறது.