Home One Line P2 இரஷியாவில் கொவிட் -19 : ஒரே நாளில் 10 ஆயிரம் புதிய பாதிப்புகள்

இரஷியாவில் கொவிட் -19 : ஒரே நாளில் 10 ஆயிரம் புதிய பாதிப்புகள்

750
0
SHARE
Ad

மாஸ்கோ – இரஷியாவின் ஏகபோகத் தலைவராக ஆதிக்கம் செலுத்தி வந்த அதிபர் விளாடிமிர் புடினுக்கும் (படம்) பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது கொவிட்-19.

அவரது பிரதமர் மிகாய்ல் மிஷூஸ்டின் கொவிட்-19 பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார் என்ற அறிவிப்பு வெளிவந்திருக்கும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை வரை, ஒரே நாளில் மட்டும் 10,633 புதிய பாதிப்புகளை இரஷியா பதிவு செய்திருக்கிறது.

இதன் மூலம் அந்நாட்டில் பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 134,687 ஆக உயர்ந்திருக்கிறது.

#TamilSchoolmychoice

மாண்டவர்களின் எண்ணிக்கை 1,280 ஆக பதிவாகியிருக்கிறது.

கடந்த நான்கு நாட்களில் தொடர்ச்சியாக 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் வரையிலான புதிய பாதிப்புகளைக் கண்டிருக்கும் இரஷியாவில் மோசமாகப் பாதிக்கப்பட்ட நகராக மாஸ்கோ திகழ்கிறது.

இரஷியாவின் மொத்த பாதிப்புகளில் சரிபாதி, மாஸ்கோவில் அடையாளம் காணப்பட்டிருக்கிறது.