Home One Line P2 தோமஸ், உபெர் கோப்பைகளிலிருந்து தாய்லாந்தும் விலகியது

தோமஸ், உபெர் கோப்பைகளிலிருந்து தாய்லாந்தும் விலகியது

581
0
SHARE
Ad

பாங்கோக்: முன்னாள் உலக சாம்பியனான ராட்சனோக் இன்டனான் மற்றும் பிற வீரர்கள் கொவிட்19 தொற்று அச்சத்தால் போட்டிகளிலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து, தாய்லாந்து பூப்பந்து அணி தோமஸ் மற்றும் உபெர் கோப்பைகளில் இருந்து விலகியதாக அதன் அதிகாரியும் பயிற்சியாளரும் தெரிவித்தனர்.

முன்னதாக, தைவான் மற்றும் ஆஸ்திரேலியா இந்த போட்டியிலிருந்து விலகிக் கொண்டன.

இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட தோமஸ் மற்றும் உபெர் கோப்பைகள் விளையாட்டு போட்டிகள், மார்ச் மாதத்தில் தொற்றுநோய் காரணமாக பாதிக்கப்பட்ட முதல் அனைத்துலக போட்டிகளாகும்.

#TamilSchoolmychoice

“முக்கிய வீரர்களுக்கு ஏற்பட்ட காயங்களுக்கு மேலதிகமாக, கொவிட்19 தொடர்பான சிறப்பு சூழ்நிலைகள்” குறித்து தாய்லாந்து தெரிவித்ததாக உலக பூப்பந்து அமைப்பு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இருப்பினும், உலகின் அதிக வருமானம் ஈட்டும் பெண் விளையாட்டு வீரர்களில் ஒருவரான இந்தியாவின் பி.வி.சிந்து, உபெர் கோப்பையைத் தவிர்ப்பதற்கான தனது முடிவை மாற்றியுள்ளார்.

சிந்து முன்பு ஒரு குடும்ப சூழ்நிலையைக் காரணமாகக் கூறி வெளியேறினார். ஆனால் இப்போது இந்தியாவின் பூப்பந்து சங்கத்தின் கோரிக்கையைத் தொடர்ந்து தனது திட்டங்களை மாற்றியுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.