Home One Line P1 கொவிட்19: பாதிப்புகள் அதிகரித்த போதும் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது

கொவிட்19: பாதிப்புகள் அதிகரித்த போதும் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது

365
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சபாவில் ஏற்பட்ட பெந்தேங் மற்றும் லாஹாட் டாத்து கொவிட்19 தொற்றுக் குழுக்கள் இன்னும் கட்டுப்பாட்டில் உள்ளதாக சுகாதார இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

இன்றைய, சம்பவ எண்ணிக்கை 100-ஆக உயர்ந்த போதிலும், மலேசியர்களுக்கு அவர் இந்த உறுதியை அளித்துள்ளார்.

இவ்விரண்டு தொற்றுக் குழுக்களில் பாதிக்கப்பட்டவர்களின்  எண்ணிக்கை அதிகமாக இருந்தபோதிலும், அதைப் பற்றி கவலைப்பட ஒன்றுமில்லை என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

மலேசியாவில் ஆவணமற்ற புலம்பெயர்ந்தோர் நுழைவதைத் தடுப்பதே ஓப்ஸ் பெந்தேங்கின் முக்கிய நோக்கம் என்பதால், பெந்தேங், லாஹாட் டாத்து தொற்றுக் குழுவில் உள்ள முக்கிய இரண்டு சம்பவங்கள் இத்தகைய நபர்களே என்று அவர் கூறினார்.

“தற்போது, ​​அவர்கள் லாஹாட் டாத்து மையத்திலும், தாவாவிலும் தடுத்து வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

“இருப்பினும், கொவிட்19 நோய்த்தொற்றுகள் அதிகரிப்பதைத் தடுக்க, மற்றவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு முன்பு தங்களை பாதுகாத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்க கடமையில் உள்ள மருத்துவ அதிகாரிகள் நினைவில் கொள்ள வேண்டும்” என்று டாக்டர் நூர் ஹிஷாம் கூறினார்.

தற்போது, லாஹாட் டாத்துவில் 431 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளனர். 87 பரிசோதனைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக முடிவு வந்துள்ளது. 212 பேர் இன்னும் முடிவுகளுக்காக காத்திருக்கிறார்கள்.

தாவாவில், 1,579 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளனர். 41 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,113 பேர் இன்னும் முடிவுகளுக்காக காத்திருக்கிறார்கள்.