Home One Line P2 ஆஸ்ட்ரோ & ராகா : செப்டம்பர் 8 முதல் 12-ஆம் தேதிவரையிலான நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள்

ஆஸ்ட்ரோ & ராகா : செப்டம்பர் 8 முதல் 12-ஆம் தேதிவரையிலான நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள்

856
0
SHARE
Ad

கோலாலம்பூர் : ஆஸ்ட்ரோ தொலைக்காட்சி அலைவரிசைகளில் எதிர்வரும் செப்டம்பர் 8 முதல் 12-ஆம் தேதிவரையில் ஒளிபரப்பாகவிருக்கும் சில நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள் பின்வருமாறு:

செவ்வாய், 8 செப்டம்பர்

கல்யாணம் 2 காதல் (புதிய அத்தியாயம் – 6-9)

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), 9.00 இரவு, திங்கள்-வெள்ளி  | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

#TamilSchoolmychoice

நடிகர்கள்: மகேந்திரன் ராமன், மலர்மேனி பெருமாள், யுவராஜ் கிருஷ்ணசாமி & பாஷினி சிவகுமார்

மியாவின் திட்டம் நன்றாக வேலை செய்யவே சௌமியாவிற்கு ஹரிஷின் மீதான எண்ணங்களில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. மியா, பாக்கியநாதன் இருவரும் ஹரிஷ் மற்றும் சௌமியாவின் மீது வெவ்வேறு எதிர்வினைகளைக் கொண்டுள்ளனர்.

புதன், 9 செப்டம்பர்

ஃபிர் ஹேரா பெரி (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

கலர்ஸ் ஹிந்தி எச்டி (அலைவரிசை 116), 10.00 இரவு   

நடிகர்கள்: அக்‌ஷய் குமார், சுனில் ஷெட்டி, பரேஷ் ரவல், பிபாஷா பாசு &  ரிமி சென்

பாபுராவ், ராஜு மற்றும் ஷியாம் ஆகியோர் செல்வந்தராக உயர்ந்தப் பின் மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனர். ஆனாலும், பணம் மகிழ்ச்சியைக் கொண்டு வரவே அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற பேராசையையும் கூடுகின்றது. எனவே, தெரியாத முதலீட்டாளராக ஒரு டானுடன், ராஜு ஒரு புதிய விளையாட்டைத் தொடங்குகிறான்.

வியாழன், 10 செப்டம்பர்

சுர்கி பீண்டி (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

BollyOne HD (அலைவரிசை 251), 9.00 இரவு   

நடிகர்கள்: சர்குன் மேத்தா & குர்னம் புல்லர்

கனடாவுக்குச் செல்ல விரும்பும் ரானோ மற்றும் ஒரு வாழ்க்கைக்காக போராடும் சுகா ஆகியோரின் கனவுகள் மற்றும் அவர்கள் ஒன்றாக தங்கள் இடங்களுக்கு எப்படி வருகிறார்கள் என்பதைப் பற்றியக் கதை.

வெள்ளி, 11 செப்டம்பர்

பிழை (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

ஆஸ்ட்ரோ தங்கத்திரை எச்டி (அலைவரிசை 241), 9.00 இரவு | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: சார்லி, மைம் கோபி & நாசத்

ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த மூன்று குறும்புத்தனம் கொண்ட குழந்தைகள் கல்விக் கற்பதை விட பணம் சம்பாதிப்பது முக்கியம் என்று நினைக்கின்றனர். வாழ்க்கையில் கல்வியின் முக்கியத்துவத்தைக் காலம் அவர்களுக்கு உணர்த்துகிறது.

சனி, 12 செப்டம்பர்

சொல்லி தொல (புதிய அத்தியாயம் – 3-4)

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), 8.00 இரவு, சனி-ஞாயிறு  | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: யுவராஜ், ஜே.கே. விக்கி, ஹம்ஸ்னி, விடியாலியானா, அல்வின், நவீன் ஹோ & லோகன்

பேய் உலகின் காதல் மன்னன், விக்கி யாஸ்மினை சந்தித்து அவள்பால் உள்ளக் காதலை வெளிப்படுத்த ஒரு பூங்காவில் காத்திருக்கிறான். மறுபுறம், திடீரென சந்தித்த ஒரு அழகானப் பெண்ணின் பின்னணியை அறிந்துக் கொள்ள யுவா அல்வினைத் தொந்தரவு செய்கிறான்.

ராகாவின் சிறப்பு நிகழ்ச்சிகள்

புதன், 9 செப்டம்பர்

நேர்காணல்: நம் நாட்டைப் பெருமைப்படுத்திய மலேசிய விளையாட்டு வீரர்கள்

ராகா, காலை 6.00 மணி முதல் – 10.00 மணிவரை | SYOK செயலியில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

விருந்தினர்: கரிஷ்மா, ராய்சன் வின்சென்ட் மற்றும் ஷர்மேந்திரன்

மலேசிய விளையாட்டு வீரர்களான கரிஷ்மா (தேசிய கூடைப்பந்து வீராங்கனை), ராய்சன் வின்சென்ட் (தேசிய ஓட்டப்பந்தைய வீரர்) மற்றும் ஷர்மேந்திரன் (தேசிய கராத்தே வீரர்) ஆகியோருடன் அவர்களின் சாதனையைப் பற்றிய ஓர் அற்புதமான நேர்காணலைக் கேட்டு மகிழலாம்.

வியாழன், 10 செப்டம்பர்

மலேசியர்கள் வெளிநாடுகளிலிருந்து மீண்டும் நம் நாட்டிற்குத் திரும்பியதற்கான காரணங்கள் என்ன?

ராகா, காலை 6.00 மணி முதல் 10.00 மணிவரை | SYOK செயலியில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

வெளிநாடுகளிலிருந்து மீண்டும் நம் நாட்டிற்குத் திரும்பியதற்கான எண்ணங்களையும் காரணங்களையும் பகிர்ந்துக் கொள்ளும் மலேசியர்களுடனான ஒரு சுவாரசியமான நேர்காணலை இரசிகர்கள் கேட்டு மகிழலாம்.

வெள்ளி, 11 செப்டம்பர்

நேர்காணல்: ராகாவின் மலேசிய நட்சத்திரத்துடன் ஒரு நாள்

ராகா, காலை 6.00 மணி முதல் 10.00 மணிவரை | SYOK செயலியில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

விருந்தினர்: குபேன் மகாதேவன்

மலேசியர் என்ற அடிப்படையில் இரசிகர்கள் குபேன் மகாதேவனுடன் ஒரு சிறப்பான நேர்காணலை கேட்டு ரசிக்கலாம்.

* நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள் மற்றும் அதன் விவரங்கள் மாற்றத்திற்கு உட்பட்டவை