புத்ராஜெயா: கெடா கோத்தா ஸ்டாரில் நாளை முதல் கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்படும் என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் இன்று அறிவித்தார்.
இது சுங்கை மற்றும் தாவார் தொற்றுக் குழுக்களுடன் இணைக்கப்பட்ட கொவிட்19 சம்பவங்கள் அவ்வட்டாரத்தில் அதிகரித்துள்ளதன் காரணத்தினால் ஏற்படுத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இதே காலகட்டத்தில் தாவாவ் சிறைச்சாலை மேம்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டுக் கீழ் வைக்கப்படும் என்றும் இஸ்மாயில் அறிவித்தார்.
இருப்பினும், சிறைச்சாலை பகுதியில் வசிக்கும் கைதிகள், சிறை ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களை மட்டுமே பாதிக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
கடந்த இரண்டு நாட்களில் சபா லாஹாட் டாத்து, தாவாவில் புதிய தொற்றுக் குழு பதிவு செய்யப்பட்டு அதில் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர்.
கொவிட்19 தொற்றுக் காரணமாக செப்டம்பர் 7, 62 சம்பவங்களும், செப்டம்பர் 8, 100 தொற்றுச் சம்பவங்கள் பதிவாகின.