Home One Line P2 கிரிக்கெட் : ஐபிஎல் போட்டிகள் தொடங்குகின்றன

கிரிக்கெட் : ஐபிஎல் போட்டிகள் தொடங்குகின்றன

811
0
SHARE
Ad

அபுதாபி : இந்தியாவின் புகழ்பெற்ற ஐபிஎல் (இந்தியன் பிரிமியர் லீக்) கிரிக்கெட் போட்டிகள் இன்று சனிக்கிழமை (செப்டம்பர் 19) முதல் தொடங்குகின்றன. ஒரே ஒரு வித்தியாசம், வழக்கமாக இந்தியாவில் நடைபெற்று வந்த இந்தப் போட்டிகள் இந்த ஆண்டு மத்திய கிழக்கு நாடான ஐக்கிய அரபு சிற்றரசுவில் நடைபெறுகின்றன.

காரணம், சொல்லித் தெரியவேண்டியதில்லை. கொவிட்-19 தொற்றின் தாக்கம் இந்தியாவைக் கடுமையாகப் பாதித்திருப்பதுதான்!

ஐக்கிய அரபு சிற்றரசுவின் அபுதாபி நகரில் இன்றும் தொடங்கும் ஐபிஎல் போட்டிகளில் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.

#TamilSchoolmychoice

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் குழுத்தலைவர் (கேப்டன்) மகேந்திர சிங் தோனி தலைமையேற்றிருக்கிறார். இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் இந்தக் குழுவின் உரிமையாளராகும்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோஹிட் ஷர்மா தலைமையேற்றிருக்கிறார். இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானிக்கு சொந்தமானது இந்த அணியாகும்.

முதல் முறையாக வித்தியாசமான முறையில் நடைபெறுகிறது இன்றைய கிரிக்கெட் ஆட்டம். அதாவது அரங்கிற்குள் இரசிகர்களுக்கோ, பார்வையாளர்களுக்கோ அனுமதியில்லை.

எனினும் போட்டிகள் நேரலையாக இந்தியத் தொலைக்காட்சி அலைவரிசைகளில் ஒளிபரப்பாகின்றன. அதனால் கோடிக்கணக்கான இரசிகர்கள் தொலைக்காட்சி நேரலை வழி ஐபிஎல் ஆட்டங்களைக் கண்டு களிக்க முடியும்.

மலேசிய நேரப்படி இரவு 10.00 மணிக்குத் தொடங்கிய இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் நாணயத்தைச் சுண்டிப் போட்டதில் வெற்றி பெற்று முதலாவதாகப் பந்து வீசும் முடிவைத் தேர்ந்தெடுத்தது.

மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது.