Home One Line P2 ஆஸ்ட்ரோ & ராகா : செப்டம்பர் 21 முதல் 27 வரையிலான நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள்

ஆஸ்ட்ரோ & ராகா : செப்டம்பர் 21 முதல் 27 வரையிலான நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள்

761
0
SHARE
Ad

கோலாலம்பூர் : ஆஸ்ட்ரோ தொலைக்காட்சி அலைவரிசைகளிலும் ராகா வானொலி ஒலிபரப்பிலும் செப்டம்பர் 21-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை இடம் பெறவிருக்கும் சில நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள் பின்வருமாறு:

திங்கள், 21 செப்டம்பர்

கல்யாணம் 2 காதல் (புதிய அத்தியாயங்கள் – 15-19)

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), 9.00 இரவு, திங்கள்-வெள்ளி |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.

#TamilSchoolmychoice

நடிகர்கள்: மகேந்திரன் ராமன், மலர்மேனி பெருமாள், யுவராஜ் கிருஷ்ணசாமி & பாஷினி சிவகுமார்

சாமினாதனின் மரணத்தின் பின்னணியில் உள்ள உண்மையை பாக்கியநாதன் கண்டுபிடிக்கிறார். பாக்கியநாதனுக்கும் கல்கிக்கும் இடையிலான போர் சூடு பிடிக்கிறது.

வியாழன், 24 செப்டம்பர்

தப்பத் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

BollyOne HD (அலைவரிசை 251), 9.00 இரவு |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.

நடிகர்கள்: டாப்ஸி பன்னு, பவைல் குலாட்டி & மாயா சராவ்

ஒரு பரிபூரண மகிழ்ச்சியான வாழ்க்கையைக் கொண்ட அமிர்தா, ஒரு விருந்தில் கணவர் அறைந்தபோது மனதளவில் சிதைந்துப் போகிறார். அவருடைய உறவு எதைக் குறிக்கிறது என்று கேள்விக் கேட்பாரா?

வெள்ளி, 25 செப்டம்பர்

கல்தா (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)ஆஸ்ட்ரோ தங்கத்திரை எச்டி (அலைவரிசை 241), 9.00 இரவு | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.

நடிகர்கள்: அப்புக்குட்டி, திவ்யா ஏலுமலை & கஜராஜ்

கழிவுகளை தங்கள் இருப்பிடப் பகுதியில் கொட்டியதால் பலர் மரணமடைந்த பின்னர், ஒரு துணிச்சலான தனிநபர் அச்செயலுக்கு எதிராகப் போராடவும், தனது மக்களின் நல்வாழ்வுக்காக மாற்றத்தைத் தூண்டவும் முன்வருகிறார்.

சனி, 26 செப்டம்பர்

சொல்லி தொல (புதிய அத்தியாயம் – 7-8)

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), 8.00 இரவு, சனி-ஞாயிறு | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.

நடிகர்கள்: யுவராஜ், ஜே.கே. விக்கி, ஹம்ஸ்னி, விடியாலியானா, அல்வின், நவீன் ஹோ & லோகன்.

கிருத்திகாவுடன் இணைந்து படம் பார்க்க அவரை ஒப்புக் கொள்ளச் செய்ய யுவா முயற்சி செய்கிறார். அலெக்ஸ், ஒரு புதிய பேயின் கதையைக் கேட்டப் பின் யுவாவின் புதிய நினைவுகள் தூண்டப்படுகின்றன.

ஞாயிறு, 27 செப்டம்பர்

அழகின் அழகி 2020 (புதிய அத்தியாயம் – 3)

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), 9.00 pm, ஞாயிறு | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்

நீதிபதிகள்: டத்தின் மணிமாலா, ஸ்ரீ சோனிக் & தனுஜா ஆனந்தன்
உள்ளூர் மாடல்களின் (models) திறமைகளை வெளிக்கொணரும் ஒரு சிறந்த வாய்ப்புக்களமாக அமைவதோடு அவர்களின் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளவும் துணைபுரியும் உள்ளூர் திறன்சாலிகள் தேர்வு.

ராகாவின் சிறப்பு நிகழ்ச்சிகள்

திங்கள், 21 செப்டம்பர்

நேர்காணல்: அல்சைமர் (Alzheimer) நோய் ஏற்படும் அறிகுறிகள், காரணங்கள், மற்றும் அல்சைமர் நோயாளியைக் கையாளும் முறைகள்

ராகா, 9 – 10am | SYOK செயலியில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

விருந்தினர்: டாக்டர் ஜெயகாந்த் ஜெயபால், நரம்பியல் நிபுணர், பந்தாய் மருத்துவமனை, சுங்கைப்பட்டாணி

அல்சைமர் (Alzheimer) நோய் ஏற்படும் அறிகுறிகள், காரணங்கள், மற்றும் அல்சைமர் நோயாளியைக் கையாளும் முறைகள் போன்றவற்றை பகிர்ந்துக் கொள்ளும் பந்தாய்  மருத்துவமனை, சுங்கைப்பட்டாணியைச் சேர்ந்த நரம்பியல் நிபுணரான டாக்டர் ஜெயகாந்த் ஜெயபாலின் நேர்காணலை இரசிகர்கள் கேட்கலாம். அல்சைமர் தொடர்பான தங்களின் சந்தேகங்களையும் வானொலிக்கு அழைத்து டாக்டர் ஜெயகாந்துடன் தெளிவுபடுத்திக் கொள்ளலாம்.

செவ்வாய், 22 செப்டம்பர்

நேர்காணல்: பெண் தொழில்முனைவோருடன் (female entrepreneurs) ஒரு நாள்

ராகா, 9 – 10am | SYOK செயலியில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

தங்கள் வெற்றிக் கதைகளைப் பகிர்ந்து கொள்ளும் பெண் தொழில்முனைவோருடன் ஒரு நேர்காணலை இரசிகர்கள் கேட்டு மகிழலாம். மேலும், இரசிகர்கள் முகநூல் நேரலையில் இணைந்து ஒரு வணிகத்தை தொடங்கும், செம்மையாக வழிநடத்தும் முறைகள் போன்ற பல்வேறு நுணுக்கங்களை அறிந்துக் கொள்வதோடு தங்கள் சந்தேகங்களையும் களையலாம்.

புதன், 23 செப்டம்பர்

நேர்காணல்: சைகை மொழியைக் கற்பதற்கான முக்கியத்துவம் மற்றும் அம்மொழியைக் கற்கும் வழிகள்

ராகா, 9 – 10am | SYOK செயலியில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

விருந்தினர்: கௌரி ஆறுமுகம், சைகை மொழி ஆசிரியை

சைகை மொழியைக் கற்பதற்கான முக்கியத்துவம் மற்றும் ஆர்வமுள்ளோர்  அம்மொழியைக் கற்கும் வழிகள் போன்றவற்றைப் பகிர்ந்துக் கொள்ளும் சைகை மொழி ஆசிரியை, கௌரி ஆறுமுகத்தின் நேர்காணலை இரசிகர்கள் கேட்டு மகிழலாம்.

வியாழன், 24 செப்டம்பர்

பிராணிகளைத் தத்தெடுப்போம் வாரீர்!

ராகா, 9 – 10am | SYOK செயலியில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

செல்லப்பிராணிகளை தத்தெடுக்க விரும்பும் விலங்குப் பிரியர்கள், தத்தெடுக்க தயாராகவுள்ள செல்லப்பிராணிகளைப் பற்றியும் அவற்றைத் தத்தெடுக்கும் முறைகளைப் பற்றி அறிய ராகா அறிவிப்பாளர்கள், சுரேஷ் மற்றும் அஹிலா தொகுத்து வழங்கும் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் நேரலையில் கலந்துக் கொள்ளலாம்.

வெள்ளி, 25 செப்டம்பர்

யூடியூப் வானொலியின் 100 நிமிடங்கள்

ராகா யூடியூப் நேரலை, 12pm – 1.40pm

ராகாவின் 100 நிமிட யூடியூப் நேரலை வழியாக அறிவிப்பாளர்கள் எவ்வாறு ஒலிபரப்புச் செய்கிறார்கள், சம்பந்தப்பட்ட செயல்முறைகள் போன்றவற்றை இரசிகர்கள் அறிந்து கொள்ளலாம். மேலும் 100K-க்கும் மேற்பட்ட யூடியூப் சந்தாதாரர்களை அடைந்ததை ராகாவுடன் கொண்டாடலாம்.

* நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள் மற்றும் அதன் விவரங்கள் மாற்றத்திற்கு உட்பட்டவை